Saturday 5 May 2018

என்னடா அரசியல் இது...!


ஒரு மண்ணும் புரியவில்லை! என்னடா அரசியல் இது என்று தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது!

எல்லாக் காலங்களிலும் - எத்தனையோ ஆண்டுகளாக - தேர்தல் என்றால் அது சனிக்கிழமைகளில் தான் நடக்கும். காரணம் அன்று பள்ளி விடுமுறை, அரசாங்க விடுமுறை, தனியார் நிறுவனங்களிலும் அரை நாள் வேலை - வாக்களிப்பதற்கு ஏற்ற நாள் சனிக்கிழமை. ஆனால் அதனை மாற்றிவிட்டு புதன் கிழமையன்று வாக்களிப்பது என்பது மிகப்பலரால் வாக்களிக்க இயலாது என்பதை அறிந்திருந்தும் - பிறகு அதனையே "உங்களுக்கு விடுமுறை கிடைக்கவில்லை என்றால் வாக்களிக்க வேண்டாம்" என்று வாக்காளர்களைப் பார்த்து கிண்டலடிப்பதும் மிகப்பெரிய அயோக்கியத்தனமே அன்றி வேறு என்ன சொல்லுவது?

பதாகைகளில் டாக்டர் மகாதிர் படத்தைப் போட்டால்  அல்லது போஸ்டர்களில் அவரது படத்தைப் போட்டால் உடனடியாக அதனை நீக்குவதும், வெட்டுவதும், கிழித்து எறிவதும் கேவலத்திலும் கேவலம்! இந்த நாடு இதுவரை இப்படி ஒரு கண்கொள்ளா காட்சியைப் பார்த்ததில்லை! 

பிரச்சாரம் செய்வதற்கு எவ்வளவு கெடுபிடிகள்! தங்களது தொகுதிகளில் பிரச்சாரம் செய்யலாமாம். வெளி இடங்களில் பிரச்சாரம் செய்ய காவல்துறையின் அனுமதி வேண்டுமாம்! அதுவும் யார், எத்தனை மணிக்கு என்பதையெல்லாம் பத்து நாளைக்கு முன்னரே தெரியப்படுத்த வேண்டுமாம்!

என்னடா இது!  இம்சை அரசன் 23-ம் புலிகேசி கூட இப்படி எல்லாம் ஆட்சி செய்திருக்க மாட்டான்!  இப்படி கோமாளிகளிடம்  ஆட்சியைக் கொடுத்து விட்டு இன்று மக்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்!



ஒன்றை மட்டும் நான் யோசிக்கிறேன். அரசாங்கத்தினர் தங்களை யாரும்  தோற்கடிக்கக் கூடாது என்பதில் எவ்வளவு எச்சரிக்கையாய்  இருக்கிறார்கள். ஆனால்  மக்கள் நலனில் ஏன் இவர்களால் எச்சரிக்கையாய் இருக்க முடியவில்லை?

அரசியலா இது! கேடு கட்ட அரசியல்! கேடு கெட்ட அரசியல்வாதிகள்!

No comments:

Post a Comment