Pages
▼
Sunday, 13 November 2016
அமெரிக்கா புதிய பாதையில் பயணிக்கமா?
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றிருக்கிறார். எல்லாரும் அறிந்த செய்தி.
புதிய அதிபரின் போக்கு எப்படி இருக்கும் என்பது இன்னும் நமக்குத் தெரியாத செய்தி. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அதிபரின் நடவடிக்கைகள் எந்தத் திசையை நோக்கி பயணிக்கும் என்பது போகப் போகத்தான் தெரிய வரும்.
ஒன்று மட்டும் உறுதி. இத்தனை ஆண்டுகள் அதிபராக இருந்தவர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகள். ஆனால் டொனால்ட் டிரம்ப் இதில் வித்தியாசப்படுகிறார். அவர் ஒரு தொழில் அதிபர். இளம் வயது தொட்டே அவர் தொழிலில் ஈடுபட்டவர். தோல்விகளையும் வெற்றிகளையும் சந்தித்தவர். மாபெரும் தோல்விகளையும் மாபெரும் வெற்றிகளையும் சந்தித்தவர். எதற்கும் அசராத ஒரு தொழில் அதிபர்! அரசியலில் அதிகம் ஈடுபாடு காட்டாத ஓர் தொழில் அதிபர்!
ஆனால் இன்று அவர் அரசியலுக்கு வந்துவிட்டார். அதிபராகவும் ஆகிவிட்டார்! இது தான் உலக மக்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கும் ஒரு செய்தி! அவர் வெற்றி பெறுவார் என்று யாரும் எதிபார்க்கவில்லை! ஆனால் அவர் வெற்றி பெற்றுவிட்டார்.
அமெரிக்காவின் எதிர்காலப் பயணம் எப்படி இருக்கும்? தனது கொள்கையில் மிகவும் உறுதியான மனிதர் டிரம்ப். அவர் சொன்னவைகளை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் போகும் மனிதர். அவ்வளவு சீக்கிரத்தில் அவர் எதனையும் விட்டுக் கொடுக்கமாட்டார்! அமெரிக்காவை நேசிப்பவர். தனது மக்கள் நல்லதொரு வாழ்க்கை வாழ வேண்டுமென்று நினைப்பவர்.
அமெரிக்காவை இன்னும் வலிமைமிக்க நாடாக உருவாக்க வேண்டும் என்னும் கொள்கை உடையவர். வையத்துத் தலைமை அமரிக்காவிடம் தான் என்பதில் கருத்து வேறுபாடு இல்லாதவர்.
அவரின் பேச்சில் ஒரு முரட்டுத்தனம் தெரிகிறது. அமெரிக்காவின் அதிபர் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு சில வரைமுறைகளை வைத்திருக்கின்றனர் மக்கள். இவரோ அனைத்தையும் உடைத்தெரியும் மனிதராக இருக்கிறார்! எதற்கும் கட்டுப்படும் மனிதராக அவர் இல்லை!
இன்னும் பதவி ஏற்காத நிலையில் - பதவியேற்க இன்னும் ஓரிரு மாதங்கள் இருக்கும் நிலையில் - இப்போதே பலரின் எதிர்ப்புக்ளுக்கு ஆளாகியிருக்கிறார்! அவரது நாட்டில் மட்டும் அல்ல , உலகங்கெகளிலும் கூட பலர் தங்களது எதிர்ப்புக்களைத் தெரிவித்து வருகின்றனர்! கொலை மிரட்டல்களும் விடப்படுகின்றன! இதுவரை எந்த ஒரு அமெரிக்க அதிபரும் இப்படி ஒரு சூழலை எதிர்நோக்கவில்லை!
ஆனாலும் டிரம்ப் அந்த அளவுக்குக் கெட்ட மனிதரா? இல்லவே இல்லை! தனது நாட்டை நேசிக்கிறார். தனது மக்களை நேசிக்கிறார்.தனது மக்கள் வேலை வாய்ப்புக்கள் பெற்று,, நல்ல முறையில் உழைத்து நாட்டின் வளத்தில் பங்கு பெற வேண்டும் என்று நினைக்கிறார்.தனது நட்டில் அமைதி நிலவ வேண்டும், பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார். இதெல்லாம் தவறு என்று எப்படி நாம் சொல்ல முடியும்? ஒவ்வொரு நாடும் தனது குடிமக்கள் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்பதில் தானே குறியாக இருக்கிறார்கள்.
புதிய அமெரிக்க அதிபர் பார்வைக்கு ஒரு கரடுமுரடான மனிதராகத் தோற்றமளிக்கிறார்! கரடுமுரடாகப் பேசுகிறார் என்பதை வைத்து நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது!
அமெரிக்காவின் வருங்கால இன்னும் சிறப்பாகவே இருக்கும்! புதிய பாதையாக இருந்தாலும் பயணம் வெற்றிகரமாகவே அமையும்!
No comments:
Post a Comment