Pages
▼
Thursday, 8 March 2018
கேள்வி - பதில் (75))
கேள்வி
ரஜினி தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆனால் தமிழ் நாட்டில் தமிழ் இருக்காது என நம்பலாமா?
பதில்
நிச்சயமாக நம்பலாம். அவருடைய சமீபத்திய பேச்சிலிருந்து அதனை அவர் உறுதி செய்து விட்டார். ஆங்கிலம் படித்தால் தான் வெளி நாடுகளுக்குப் போய் வேலை செய்யலாம் என்று அவர் ஆங்கிலத்திற்கு நற்சான்றிதழ் கொடுத்து விட்டார்! காரணம் அவர் மனைவி நடத்தும் பணக்காரப் பிராமணர்கள் படிக்கும் கல்லுரி கூட ஆங்கிலத்தில் தான் நடைபெறுகிறது என்பதால் இந்த நற்சான்றிதழ் தேவைப்படுகிறது என்று நாம் நினைத்தால் அது பிழை என்று யார் சொல்ல முடியும்? எல்லாமே தங்களின் குடும்பத்தைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை வைத்துத் தான் அரசியல் நடத்துகிறார்கள்!
இப்படியெல்லாம் பேசஅவரால் எப்படி முடிகிறது? சமீபத்தில் தான் அவர் தன்னைத் தமிழன் என்று பிரகனப்படுத்தினார்! தமிழன் என்று பிரகடனப்படுத்தியதுமே எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்கின்ற துணிவு அவருக்கு ஏற்பட்டுவிட்டதோ! இவருடைய பேச்சை ரசித்தவர்கள் நிச்சயமாக தமிழர்களாக இருக்க முடியாது. அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் - இவர்கள் தான் அவருடைய அரசியலை விரும்புகிறார்கள். காரணம் தமிழ் நாட்டிற்கு தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதை இந்தக் கூட்டம் விரும்பவில்லை.
ரஜினி ஒன்றை மிகவும் வசதியாக மறந்து விட்டார். அவருடைய சொந்த மாநிலமான கர்நாடகாவில் " கன்னடம் எழுதப் படிக்கத் தெரியாத எந்த அரசாங்க ஊழியரும் எங்களுக்குத் தேவையில்லை" என்று கர்நாடக முதலமைச்சர் பகிரங்கமாக அறிவித்துவிட்டார்! எங்களுக்கு இந்தி தெரியும், எங்களுக்கு ஆங்கிலம் தெரியும் ஏன்று எந்த மத்திய அரசாங்க ஊழியரும் அங்கே சவால் விட முடியாது!
ஆனால் தமிழ் நாட்டிற்குப் பிழைக்க வந்த ரஜினி ரொம்ப ரொம்பத் தாராளமாக "தமிழ் தேவை இல்லை! ஆங்கிலம் தான் தேவை!" என்று துணிச்சலாகச் சொல்ல முடிகிறது என்றால் தமிழன் இளிச்சவாயன் என்று ரஜினியும் நினைக்கத் தொடங்கி விட்டார்!
ரஜினியின் அரசியல் தமிழ் நாட்டிற்குத் தேவை இல்லை! தமிழ் அழிந்தால் தமிழர் கலாச்சாரம், தமிழர் பண்பாடு அனைத்துக்கும் ஆபத்து ஏற்படும். அவருடைய அரசியலை முளையிலேயே கிள்ளி எறிவோம்!
No comments:
Post a Comment