Pages

Saturday, 16 February 2019

இது ஒரு கடுமையான குற்றச்சாட்டு..!

ஜனநாயக செயல் கட்சியில் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மிகக் கடுமையான  ஒரு குற்றச்சாட்டு!

நம்பலமா, நம்பக்கூடாதா என்று யோசிக்க ஒன்றுமில்லை!  நம்பலாம்! ஏனெனில் இதையெல்லாம் செய்வதற்கு நமது தலைவர்களுக்கு எல்லாத் தகுதிகளும் உண்டு! ஆச்சரியப் பட ஒன்றுமில்லை!

 "புந்தோங் வீட்டுமனை விவகாரத்தில் நமது தலைவர்களே துரோகம் செய்வதா?"  என்பதாக தமிழ் மலர் நாளேட்டில் ஒரு செய்தி. 133 இந்திய குடும்பங்களுக்குக் கிடைக்க வேண்டிய வீட்டுமனைகள் இப்போது சீனர்கள் பக்கம் திருப்பி விடப்பட்டிருப்பதாக அந்தச் செய்தி கூறுகிறது! இதற்கு  உடந்தையாக இருப்பவர்கள் நமது இன சட்டமன்ற உறுப்பினரும் இன்னொரு நமது இன நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவர்!

ஏற்கனவே பாரிசான் கட்சி ஆட்சியில் இருந்த போது இந்தத் திட்டம் இந்தியர்களுக்கென ஏற்றுக்கொள்ளப்பட்ட  திட்டம் ஆகும். அதுவும் அல்லாமல் பக்கத்தான் கட்சி ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகும் இந்த 133 இந்திய குடும்பங்களுக்கு வீட்டுமனை கொடுக்கப்படும் என்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் இப்போது தலைகீழாக மாற்றப்பட்டு இந்த வீட்டுமனைகள் சீனருக்கே என்று சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சொல்லுகிறார். எதற்கும் சம்பந்தமில்லாத ஒரு சீனர் இதனைச் சொல்லுகிறார். மந்திரி பெசார் எந்த ஆட்சேபனையும் சொல்லவில்லை. நமது இன சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ ஒன்றும் கண்டு கொள்ளவில்லை!

என்னடா இது! ம.இ.கா. காரனும் இதைத் தான் செய்தான்! அவனுக்கு மலாய் எம்.பி. க்களின் உதவி தேவை. அப்போது தான் அவனுக்குப் பதவி கிடைக்கும். அதனால் அவன் அன்று வாய் திறக்கவில்லை! இன்று இவனும் இதைத் தான் செய்கிறான்!  இவனுக்குச் சீனனின் தயவு தேவை. இவனும் வாய் திறக்கமாட்டேன் என்கிறான்!

என்னடா சாபம் இந்த சமூகத்திற்கு!  ம.இ.கா.காரனாவது அரைகுறை படிப்பு படித்தவன் என்று சொன்னோம்! இவன்  எல்லாம் பெரிய  படிப்பு  படித்தவன் என்று  நாம்  நினைத்துக்  கொண்டிருக்கும்  வேளையில்  இப்படி ஒரு  குண்டைத்  தூக்கிப்  போடுகிறார்கள் புந்தோங் வட்டார மக்கள்!

ஆக, படிப்புக்கும் படிப்பறிவு இல்லாதவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை! சொந்த சமுதாயத்திற்குச் சேவை செய்ய இயலாதவனுக்கு பெரிய பெரிய பட்டம் பெற்றவனெல்லாம் எதற்கு? 

ஏற்கனவே ம.இ.கா. காரனை  எவ்வளவோதீட்டித் தீர்த்திருக்கிறோம்! இனி இவர்களையும் அப்படித்தான் திட்ட வேண்டுமா? 

பொறுப்போம்!  இனி இவர்களுக்குப் பாடம் கற்பிப்போம்!

No comments:

Post a Comment