Pages
▼
Saturday, 18 February 2017
வங்காளதேசிகளுக்கே.....!
இப்போது மலேசிய நாட்டில் வங்காளதேசிகளுக்கும் இந்தியர்களுக்கும் தான் நாளுக்கு நாள் போட்டி அதிகமாகிக் கொண்டு வருகிறது.
இந்தியர்கள் என்று சொல்லுவதைவிட குறிப்பாகத் தமிழர்கள் தான் பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
சீனர் ஒருவர் அவர் செய்கின்ற தொழிலை விற்கிறார் என்றால் அது இன்னொரு சீனர் கைகளுக்குத் தான் போவும். ஆனால் நமது நிலை அப்படி அல்ல. ஒரு தமிழன் செய்கின்ற தொழில் ஒரு தமிழன் கைகளுக்கு மாறுவதில்லை.
ஒன்று: இன்னொரு தமிழன் முன்னேறுவதை நாம் விரும்பவில்லை.
அது நமது பொறாமைக் குணம். கணவன் விரும்பினாலும் மனைவி விரும்ப மாட்டாள்!
இரண்டு: மதம் என்பதும் ஒரு முக்கிய காரணம். இந்து, முஸ்லிம்,
கிறிஸ்துவன் என்னும் பிரிவினையும் உண்டு. ஒருவர் மீது
ஒருவருக்கு நம்பிக்கை இல்லை. நாம் தமிழர் என்னும் எண்ணம் இன்னும் நமக்கு வரவில்லை.
மூன்று: வங்காளதேசி நம்மைவிடக் கூடுதலாகப் பணம் கொடுக்கிறான் என்றால் அவனுக்கே முதலிடம்!
நாம் செய்கின்ற தொழில் மற்ற இனத்தவரின் கைகளுக்குப் போகக் கூடாது என்னும் இன உணர்வு நம்மிடம் இல்லை.
ஒரு வியப்பானச் செய்தி. இப்படிச் செய்கிறவர்கள் தான் தமிழர்களிடையே ஒற்றுமில்லை என்று பேசுபவர்களாக இருக்கிறார்கள்!
இன்று தமிழர்கள் செய்கின்ற சிறு சிறு வியாபாரங்கள் எல்லாம் வங்காளதேசிகளுக்கே கைமாறுகின்றன.. ஒரே காரணம். அவர்கள் அதிகப்பணம் கொடுக்கிறார்கள் என்பது தான்.. எல்லாவற்றையும் அந்நியனுக்குத் தாரளமாக விட்டுக் கொடுத்துவிட்டு அப்புறம் வங்காளதேசிகள் தான் எங்கள் எதிரிகள் போன்று வெளியே வந்து பேசுகிறார்கள்!
என்னடா! இனம் இது! நான் வழக்கமாகப் போகும் மார்க்கெட்டில் ஒரு தமிழர் காய்கறி வியாபாரம் செய்து வந்தார் பெரிய அளவில். வியாபாரிகள் எல்லாம் அவரிடம் தான் காய்கறிகள் வாங்குவார்கள். தீடீரென ஒரு நாள் ஒரு வங்காளதேசியிடம் தனது தொழிலை விற்று விட்டார்! என்ன காரணம்? பெண்டாட்டிக்கு உடல் நலம் இல்லையாம்! அவருடைய வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் இந்தியர்கள். இவரைப் போன்றவர்களை நாம் என்ன செய்வது?
நாம் தமிழர் என்கின்ற உணர்வு இல்லாதவரை நாம் பல துன்பங்களை அனுபவித்துத் தான் ஆக வேண்டும். அனைத்தும் நமக்கு நாமே வருவித்துக் கொள்ளும் துன்பங்கள் தான்..
நமது தொழில்கள், நமது வியாபாரங்கள் அனைத்தும் நம் இனத்தவருக்கே கைமாற வேண்டும். நாம் தமிழர் என்னும் உணர்வு ஒங்க வேண்டும்!
வங்காளதேசியிடம் போன தொழில்கள் மீண்டும் நமது கைகளுக்கு வரப்போவதில்லை! அதனால்...? நமது தொழில்கள், நமது சொத்துக்கள் அனைத்தும் நம் இனத்தவரிடம் தான் இருக்க வேண்டும். வாழ்க தமிழினம்!
No comments:
Post a Comment