Pages
▼
Tuesday, 6 June 2017
ரஜினி அரசியலுக்கு வருவார்....!
ரஜினி அரசியலுக்கு வருவாரா, வரமாட்டாரா என்னும் கேள்விக்கு இனி இடமில்லை. வருவார் என்பதற்கான அறிகுறிகள் அதிகமாகவே தோன்றுகின்றன. அவர் வாயால் அதனை உறுதிப்படுத்தாவிட்டலும் அவருடைய நெருக்கங்கள் மூலம் அது உறுதிப்படுத்தப் படுகிறது.
ஒரு தமிழர் தமிழகத்திற்கு முதலைமைச்சராக வருவதைத் தான் நான் விரும்புகிறேன். ஆனாலும் அது உடனடியாக நடக்கும் என்பதற்கான் அறிகுறி எதுவும் தென்படவில்லை. தமிழனின் சினிமா மோகம் குறைந்திருப்பதாகவும் தெரியவில்லை. அதனால் ரஜினியை ஆதரிக்கும் நிலையில் நான் இருக்கிறேன். நான் நினப்பதெல்லாம் தி.மு.க., அ.தி.மு.க. இனி தமிழ் நாட்டில் தலை தூக்கக் கூடாது. அதுமட்டும் அல்ல இனி எந்தத் திராவிடக் கட்சிகளும் தமிழ் நாட்டில் ஒழித்துக்கட்டப்பட வேண்டும்.
அப்படி ரஜினி அரசியலுக்கு வந்து வெற்றி பெற்று முதலைமைச்சர் ஆனால் அவர் செய்ய வேண்டிய முதல் வேலையாக நான் நினைப்பது:
1) அவர் எந்தக் கட்சியுடனும் கூட்டு சேரவில்லை என்பதால் அவர் தனிக்கட்சி ஆரம்பிக்கும் நிலையில் இருக்கிறார். அப்படி தனிக்கட்சி ஆரம்பிக்கும் போது "திராவிடம்" என்னும் சொல் பயன்படுத்தக்கூடாது. அதாவது "தமிழர் கட்சி" அல்லது "தமிழர் முன்னேற்றம் கழகம்" போன்று இருப்பது அவசியம்.
2. ரஜினி முதலமைச்சர் என்றால் உடனே ஒரு துணை முதலமைச்சராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். வருங்காலங்களில் தமிழர் ஒருவர் முதலமைச்சர் பதவிக்கு வர இது வழி வகுக்கும்.
3. தமிழ் நாட்டில் உள்ள எல்லாக் கல்வி நிலையங்களிலும் தமிழ் மொழி கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும்.
தமிழ் நாட்டின் பிரச்சனைகள் பல. அது ரஜினிக்கும் தெரியும் என்பதால் அந்தப் பிரச்சனைகளைக் களைய அவருக்குத் தெரியும். தன்னைத் தமிழன் என்று அவர் கூறுவதால் கவேரிப் பிரச்சனையை அவரால் தீர்க்க முடியும் என்று நம்மால் தீர்க்கமாகக் கூற முடியும்.
பிற மாநிலத்தவர் தமிழ் மாநிலத்தை ஆளுவது ரஜினியோடு முற்றுப் பெற வேண்டும். ரஜினியே முன்னுதாரணமாக இருந்து தகுந்த தமிழ் நாட்டவரை முதல்வர் பதவிக்குத் தயார் செய்ய வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
வாழ்க தமிழகம்!
No comments:
Post a Comment