Pages
▼
Wednesday, 4 April 2018
29 ஆண்டுகளுக்குப் பிறகு.....!
29 ஆண்டுகளுக்குப் பிறகு, தாய் தன் மகனுடன் ஒன்றாகப் பள்ளியில்..
படிக்க வேண்டும் என்னும் பசி வந்து விட்டால் வயதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல! 1989 - ம் ஆண்டு ஒன்பதாம் வகுப்போடு, ஏழ்மையின் காரணங்களால், தனது கல்வியை ரஜினிபாலா முடித்துக் கொண்டார். 29 ஆண்டுகளுக்கு முன் தொடர முடியாமல் போன அந்தப் பத்தாம் வகுப்பை இப்போது தான் தொடர அவருக்கு நேரம் காலம் கனிந்து வந்திருக்கிறது. அவரது மகனும் பத்தாம் வகுப்பு மாணவராக இருப்பதால் இருவரும் ஒன்றாகவே பள்ளிக்குச் செல்லுகின்றனர்; ஒன்றாகவே படிக்கின்றனர்.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் 29 ஆண்டுகள் கழித்து இவர் பள்ளிக்குச் செல்கிறார் என்றால் அவரது கணவரோ 17 ஆண்டுகள் கழித்து பள்ளிக்கு சென்று தனது கல்வியை முடித்தவர்!
இந்தியா, லுதியானா, பஞ்சாப் மாநிலத்தில் தான் இந்த கல்வித் தாகம் நிகழ்ந்திருக்கிறது. அந்தத் தாய்க்கு இப்போது வயது 44. அவர் மருத்துவமனை ஒன்றில் ஏவலாளராகப் பணி புரிகிறார். ஒரு மாத கால விடுமுறை எடுத்து பரிட்சையில் தீவிர கவனம் செலுத்தி பரிட்சை எழுதியுள்ளார்.
தான் ஒரு பட்டதாரியாக ஆக வேண்டும் என்னும் கனவோடு பள்ளியில் சேர்ந்திருக்கிறார் ரஜினிபாலா. மீண்டும் பள்ளி போகும் திட்டத்திற்கு அவரது கணவர் தான் தூண்டுகோளாக இருந்ததாகக் கூறுகிறார் ரஜினி. "முதலில் யாராவது தொடங்க வேண்டும். அப்போது தான் மற்றவர்களும் நம்மைப் பின்பற்றுவார்கள். நீயே ஆரம்பமாக இரு. அரைகுறையாக படித்தவர்களும் பள்ளிக்கூடம் வர ஆரம்பிப்பார்கள்! அதைத்தான் இப்போது நான் செய்கிறேன்." என்கிறார் ரஜினி.
நல்லதொரு ஆரம்பம். கல்வி கற்ற சமுதாயம் என்பது முக்கியம். வயதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் யாராக இருந்தாலும் வரவேற்போம்! வாழ்த்துவோம்!
இந்தத் தாயையும் வாழ்த்துவோம்!
No comments:
Post a Comment