Pages
▼
Friday, 20 April 2018
வெற்றிகள் எந்த வயதிலும் வரலாம்...! (3)
வெற்றிகள் எந்த வயதிலும் வரலாம். ஒன்று வயதாகிய பின்னர் வரலாம். மிகச் சிறிய வயதில் வரலாம். அதுவும் இல்லை, இதுவும் இல்லை வயதிலும் வரலாம்!
அப்படித்தான் ஒர் இடைப்பட்ட வயதில் - ஒரு முப்பத்தைந்து வயதுக்குள் இருக்கும் - செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி விஜய்டிவி சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கிராமியப் பாடல்களைப் பாடி அசத்திக் கொண்டிருக்கிறார்கள்!
ஓரே இரவில் உலகத்தமிழரிடையே புகழ் பெற்றவர்கள் என்றால் இந்த ஜோடியைத் தான் நாம் சொல்ல வேண்டும்! யாரும் எதிர்பாராத ஒரு நேரத்தில் விஜய்டிவி இந்தக் கிராமிய இசைக் கலைஞர்களை அவர்களின் போட்டியின் மூலம் ஒரு பிரமாண்டமான அறிமுகத்தை செய்து வைத்திருக்கிறார்கள்!
கிராமிய இசைக்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கம் என்பது நல்ல நோக்கமே. அதே சமயத்தில் அவர்கள் தேர்ந்தெடுத்த கலைஞர்கள் மிகவும் திறமைசாலிகள் என்பதையும் மறுக்க முடியாது. இதன் மூலம் இந்தக் கலைஞர்களுக்கு பேரும், புகழும் அத்தோடு பொருளாதார ரீதியிலும் வெற்றி பெறுவார்கள் எனவும் நாம் நம்பலாம்.
கிராமிய இசை என்பது நலிந்து வரும் ஒரு கலையாகவே இது நாள் வரை தொடர்ந்து வந்திருக்கிறது. இனி அதற்கு ஒரு மவுசு ஏற்படும் என நாம் நம்புகிறோம். இந்த கணவன் மனைவி ஜோடியை சரியான நேரத்தில் விஜய் டிவி அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். பாடலா பாடுகிறார்கள். அனைத்தும் கிராமத்து ஏழைகளின் ஏக்கம், வாட்டம், வருத்தம் அதே சமயத்தில் காதல், நகைச்சுவை என்று பின்னி எடுக்கிறார்கள்! அவர்கள் பாடிய அம்மா பாடல்கள், விவசாயம் கைத்தறி நெசவாளர் பற்றிய பாடல்கள் மனதை உருக வைக்கும் பாடல்கள்.
இவர்களின் பாடல்களினால் நெசவாளர்களுக்கு ஒரு புதிய உத்வேகம் கிடைத்திருக்கிறது. அவர்கள் வாழ்க்கையில் வசந்தம் வீசும் என நம்பலாம். தமிழர்கள் இப்போது சுதேசி பொருட்களைப் பயன்படுத்துவதால் தமிழர்களின் பொருளாதாம் உயரும் என்னும் விழிப்பு ஏற்பட்டிருக்கிறது. நாம் தமிழர் என்னும் விழிப்புணர்ச்சி இப்போதாவது ஏற்பட்டிருக்கிறதே என நாம் பெருமைப்படலாம்.
இந்த தம்பதியினர் அற்புதமான குரல் வளத்தைக் கொண்டிருக்கிறார்கள். சங்கீதம் எதுவும் கற்கவில்லை! நாட்டுப்புற கலைஞர்களுக்குக் கத்திப் பாடுவதே சங்கீதமாகிவிட்டது! உலகலாவிய தமிழர்களின் மனதில் ஒரே இரவில் இடம் பிடித்த செந்தில்கணேஷ்-ராஜலட்சுமி தம்பதியினருக்கு நமது வாழ்த்துகள்! அவர்களது நாட்டுப்புற இசை உலகமெங்கும் ஒலிக்க மீண்டும் மீண்டும் வாழ்த்துகள்!
வெற்றி என்பது குறிப்பிட்ட வயதினருக்குத் தான் என்பதில்லை. எந்த வயதிலும் வரலாம் என்பதற்கு இவர்கள் ஓர் எடுத்துக் காட்டு!
No comments:
Post a Comment