Pages

Tuesday, 1 January 2019

புத்தாண்டு வாழ்த்துகள்!

இந்த வலைத்தளத்தை வலம் வரும் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள்!

புதிய ஆண்டு. இன்னும் ஒரு 365 நாள்கள். எல்லாம் புத்தம் புதிது. ஆமாம்,  நாம் எப்படி நம் கண் முன்னே உள்ள இந்தப்   புதிய ஆண்டை  வரவேற்கப் போகிறோம்? நேற்று நாம் வரவேற்றோம்! அதனால் பயனில்லை.  அது ஒரு நாள் கூத்து! மீதமுள்ள நாள்களை எப்படி நாம் பயன்படுத்தப் போகிறோம் என்பது தான் கேள்வி. இந்த நாள்களையும் வெறும் கூத்தடித்து, கும்மாளமடித்து கொண்டாட வேண்டுமா?

எதைச் செய்தாலும் பரவாயில்லை. ஆனால் அந்தப் கூத்தடிப்பு உங்களை முன்னேற்றத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். உங்களது முன்னேற்றத்திற்குத் துணையாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும் உங்களது முன்னேற்றத்தை நோக்கி செலுத்த வேண்டும். இந்த ஆண்டு அதனை வலுவாகப்பிடித்துக் கொள்ளுங்கள்.

பிறருக்கு முடிந்தால் உதவி செய்யுங்கள். பணம் கொடுத்தால் தான் உதவி  என்று நினைக்க  வேண்டாம்.  பணம் இல்லாமலே பல உதவிகள்  இந்தச் சமுதாயத்திற்குத் தேவைப்படுகிறது. SPM  படித்த மாணவர்களுக்கு நிறையவே வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. நல்ல புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றிருந்தால் கல்லூரிகளுக்குச் செல்ல  அவர்களுக்கு  வழிகாட்டுங்கள்.  தேர்ச்சி பெறாத மாணவர்களாக இருந்தால் தொழிற்கல்வி பயில வழிகாட்டுங்கள். வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. 

நமது பெற்றோர்களுக்கு ஒரு பழக்கம். தோல்வி என்றால் "வேலைக்குப் போ!" என விரட்டுகின்றனர். அவர்களுக்கு ஏற்றாற் போல சில நிறுவனங்களின்  ஏஜெண்டுகள் கொஞ்சம் சில்லறைகளுக்காக இந்த மாணவர்களைக் கொத்திச் செல்ல தயராக இருக்கின்றனர்! நம்மைக் கெடுக்க நம்மவனே போதும், வேறு யாரும் வேண்டாம்!

இந்த புத்தாண்டில் ஓர் உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். நமக்குத் தெரிந்த ஒரு மாணவனுக்காகவாவது உதவ வேண்டும். ஒவ்வொரும் ஒரு மாணவன் என்றால் இந்த சமுதாயம் உயர்ந்து விடும்.

ஒன்று சேர்ந்து கைகோத்து இந்த சமுதாயத்தை உயர்த்துவோம்!

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

No comments:

Post a Comment