Pages
▼
Friday, 26 June 2020
அந்த நாளும் வந்திடாதோ...!
நமது நாடு கொரோனா தொற்று நோயிலிருந்து ஓரளவு விடுபட்டு இருக்கிறது என்று சொல்லலாம்.
சுமார் முப்பது விழுக்காடு என எடுத்துக் கொள்ளலாம். இன்னும் வெகு தூரம் போக வேண்டியுள்ளது.
இருந்தாலும் கொஞ்சம் முன்னேற்றம். மூச்சு விட முடிகிறது. பன்னிரண்டு வயதுக்குக் கீழ்பட்டவர்கள், அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் இன்னும் வீட்டினுள் அடைந்தே கிடக்க வேண்டியுள்ளது மிகப்பெரும் சோகம்!
வேறு வழியில்லை என்று அரசாங்கம் சொல்லும் போது ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.
ஆனால் வெளியில் நடப்பதென்ன?
சிறு குழந்தைகள் எல்லாம் தாராளமாகப் பெற்றோர்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றுகிறார்கள்! அறுபது வயதற்கு மேற்பட்டவர்கள் எதற்கும் பயப்படுவதாகத் தெரியவில்லை! எல்லாருமே 'திடாப்பா!' என்கிற எண்ணத்துடன் நடந்து கொள்ளுகிறார்கள்! இது பொறுப்பற்ற செயல் என்பது நமக்குப் புரிகிறது. அவரில் ஒருவர் பிரச்சனைக்கு உள்ளானால், அவர் குடும்பம், அவர் வாழுகின்ற இடம், அக்கம் பக்கம் - இப்படி எல்லாருமே பயப்படும்படி ஆகிவிடும். ஆனாலும் மீறுகிறார்கள்! அக்கறையற்ற இழி பிறப்புக்கள்! அவ்வளவு தான் சொல்ல முடியும்!
வருகின்ற மாதத்தில் மேலும் பல தளர்வுகள் காத்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக திருமணங்கள், திரை அரங்குகள், தனியார் கல்வி நிலையங்கள் - இன்னும் பல.
திருமணங்கள் சரி. திருமண விருந்துகளைத் தள்ளிப் போடுவதே சிறந்தது. இதில் பல சிக்கல்கள். ஒன்று பிள்ளைகள் வரக்கூடாது, பெரியவர்கள் வரக்கூடாது என்பதே ஒரு பிரச்சனை! மேலும் வருபவர்களை எல்லாம் உடல் வெப்பநிலையைச் சோதிப்பது.........!முகக் கவசம் பரவாயில்லை! தீர்த்துக் கொள்ளலாம்! அவர்களது முகவரி இத்யாதி, இத்யாதி.
ஆனாலும் பரவாயில்லை. இப்போது எல்லாமே மலேசியர்களுக்கு இயல்பாகி விட்டது! இப்படித்தான் இனி மனிதர்களின் தினசரி வாழ்க்கை அமையுமோ? தெரியவில்லை! பொறுத்திருந்து பார்ப்போம்.
இனி நாம் வாழ்ந்த அந்த பழைய வாழ்க்கை....வருமா? வரும் வரை "அந்த நாளும் வந்திடாதோ!" என்று பாடி வைப்போம்!
No comments:
Post a Comment