Pages

Monday, 5 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி......,..! (21)

 சிறு தொழில்களில் கவனம்  செலுத்துங்கள்

                                  
 எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் முதன் முதலாக தொழிலில் காலெடுத்து வைப்பவர்கள் ஒரு சிறிய முதலீட்டின் மூலமே தங்களது பயணத்தைத்தொடங்க வேண்டும் என்பதே எனது அறிவுரை.

பயணம் நீண்ட காலம் என்று தான் இருக்க வேண்டுமே தவிர ஏதோ ஒரு குறுகிய காலத்தில் சம்பாதித்து விட்டு ஓடிவிட வேண்டும் என்கிற எண்ணம் வரவே கூடாது. தொடர்ந்து அடுத்த தலைமுறையும் தொழிலைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே தவிர வேறு எண்ணத்தை வளர விடக் கூடாது!

இன்று அது சிறிய தொழிலாக இருந்தாலும் நாளை அது பெரிய தொழிலாக மாற வாய்ப்புண்டு.  பெரிய தொழிலாக மாற வேண்டும் என்கிற இலட்சியத்தோடு நமது கவனத்தைச்  செலுத்தினால் அது அப்படியே ஆகும்.

எந்த ஒரு இலட்சியமும் இன்றி செயல்படும் போது நாம் எங்கே போகிறோம் என்பது நமக்கே தெரிவதில்லை. நமது குறிக்கோளில் ஒரு தெளிவு வேண்டும்.

நாம் தொழில் செய்ய வரும்போதே ஒரு நீண்ட கால இலக்கோடு தான் வர வேண்டும்.  எல்லாக் காலங்களிலும் ஒரு சிறிய தொழிலை வைத்துக் கொண்டு காலந்தள்ள முடியாது. அப்படி செய்வது நம்மிடையே சோர்வை ஏற்படுத்தும்.

எனது நண்பர் ஒருவர் சிறிய அளவில் அச்சகம் ஒன்று நடத்தி வந்தார். அவர் அச்சகத் துறையில் நீண்ட கால அனுபவமுள்ளவர். நன்கு உழைக்கக் கூடியவர். வெற்றிகரமாகவே நடத்தி வந்தவர். ஆனால் அவர் யாரையும் உதவிக்கு வைத்துக் கொள்ளவில்லை. வளர்ந்த பிள்ளைகள் இருந்தும் அவர் அங்கு யாரையும் அனுமதிக்கவில்லை. ஒரு நாள் அகால மணமடைந்தார். தனி ஒருவராக வேலை பளுவைத் தாங்கிக் கொள்ள  முடியவில்லை. அவரது குடும்பத்தினர் சிரமத்தை எதிர்நோக்கினர்.  தனி ஆளாக வளர்த்த அவரது தொழில் கடைசியில் ஒன்றுமில்லாமல் போனது.

இப்படித்தான் நம்மவரின்   தொழில்கள்  பல நசிந்து போயின..நாம் ஏதோ ஒரு கட்டுப்பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கிறோம். நம்மில் பலர் சொல்லுகின்ற செய்தி "நான் படுகின்ற சிரமம்  என் பிள்ளைகள் படக் கூடாது!" என்பது தான். இங்கு தான் நாம் தவறு செய்கிறோம். எதை செய்தாலும் அது "கஷ்டம்" என்று  சொல்லி சொல்லி பிள்ளைகளை வளர்க்கிறோம்! இது நமது குறைபாடு. நம்மைப் போல  சீனர்கள் நினைத்திருந்தார்களானால் தொழில் துறை என்பது அவர்கள் கையில் இருக்காது!

உலகில் எல்லாமே கஷ்டம் தான். எதுவும் சுலபமாக கிடைப்பதில்லை. எல்லாவற்றுக்கும் உழைப்பு உண்டு. ஆனால் தொழிலில் மட்டும் தான் அதிக உழைப்பு அதிக வருமானம்.  இதை நாம் மறந்து விடக் கூடாது!

சிறு தொழிலாக இருந்தாலும் ஏதோ ஒரு பெரிய நிறுவனத்தை நடத்துவது போல நடத்த வேண்டும். சிறு தொழில்களைப் பெருந்தொழிலாக மாற்ற வேண்டும். இன்னும் குறிப்பாக அடுத்த தலைமுறைக்குத் தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.

எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் சிறு 

No comments:

Post a Comment