Pages

Monday, 28 February 2022

உக்ரைன் மக்களுக்காக வேண்டுவோம்!

 

                                                              Apartment Building Destroyed.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படை எடுத்தது சரியா தவறா என்று  மூக்கை நுழைக்கை விரும்பவில்லை. . காரணம் அது பல பல பல்லாண்டு கால பகையாக இருக்கலாம்.

வெளிப்பார்வைக்குப் பழி ரஷ்யா மீது விழுகிறது. உண்மை, பொய்மை என்பது பற்றி நமக்குத் தெரிய நியாயமில்லை. உண்மை வரும் போது வரட்டும்.

ஆனால் இப்போது அடித்துக் கொண்டு சாகிறார்களே இதற்கு நம்மால் என்ன செய்ய முடியும்?

ஒரு பலவீனமான உக்ரைன் நாட்டை பெரும் பலம் கொண்ட ரஷ்யா  அடித்துத்  துவம்சம் பண்ணுகிறதே - அது தான் மனதை வேதனைப் படுத்துகிறது. 

மோதிக் கொள்பவர்கள் சரிசம பலம் கொண்டவர்களாக இருந்தால்  "எப்படியோ போங்கடா!" என்று கை கழுவி விடலாம்/ ஆனால் உக்ரைன் நாடு எந்த வகையிலும் ரஷ்யாவின் படை பலத்திற்கு ஈடாகாது! அதனால் உக்ரைன்  மக்கள் வீரம் குன்றியவர்கள் என்று  ஒரு முடிவுக்கு  நாம் வந்துவிட முடியாது!

சண்டையில் எவன் ஆயுதபலத்தை முதலில் பயன்படுத்துகிறானோ அவன் தொடர்ந்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் அவன் இருப்பான். அவனுக்கு எப்போதும் ஒரு பயம் இருக்கும்!    

  இப்போது உக்ரைன் நாட்டின் நிலை என்ன?

உக்ரைன் மக்கள்  அக்கம்பக்கத்தில உள்ள நாடுகளுக்கு  அடைக்கலம் தேடி ஓடுகிறார்கள். வேறென்ன செய்ய முடியும்? அவர்கள்  நிராயுதபாணியான மக்கள்.   குண்டு வீச்சினால் வீடுகள் சிதலமடைந்து விட்டன. தங்க இடமில்லை. சாப்பாட்டுக்கு வழியில்லை. குடிக்கத் தண்ணீர் இல்லை. யார் எந்த நேரத்தில் போய் சேர்வார்களோ என்று சொல்ல முடியவில்லை. அப்பனா ஆத்தாவா, அம்மாவா அத்தை மகளா யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை.  வீடுகளை இழந்து, உடமைகளை இழந்து என்ன தான் வாழ்க்கை இது?

"எங்கே மனிதன்  யாரும் இல்லையோ அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!"  இறைவா!  சிரித்து மகிழ்ந்து வாழ்ந்த மக்கள்  இன்று கண்ணீரும் கம்பலையுமாய் கட்டிய துணிகளோடு பரதேசம் செல்லுகிறார்களே! என்ன பாவப்பட்ட ஜென்மங்கள் இவர்கள்!

இறைவா! உக்ரைன் நாட்டில் சமாதானத்தைக் கொண்டு வந்தருளும்! போரினால் எந்த ஒரு தீர்வையும் கொண்டுவர முடியாது! என்பதை உலகம் அறிந்திருக்கிறது! தீர்வு என்பது இறைவனால் மட்டுமே முடியும்!

நண்பர்களே! உக்ரைன் நாட்டு மக்களுக்காக அனைவரும் பிரார்த்திப்போம்!

No comments:

Post a Comment