Pages

Wednesday, 6 March 2024

மீ கோரிங் சாப்பிடலாமா?

நம் நாட்டில் மீ கோரிங் சாப்பிடுகின்ற விஷயங்கள் எல்லாம்  ஒரு பிரச்சனையே அல்ல.  எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம் எங்கு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

பொதுவாக எல்லா இன உணவகங்களிலும்  மீ  சாப்பிடலாம்.  வெவ்வேறு  மீ வகைகள் என்றால்  அது சீன உணவகங்கள் மட்டும் தான். நான் பெரும்பாலும் இந்திய உணவகங்களில் மீ சாப்பிடுவேன்.  சீன உணவகம் என்றால் அது 'லக்சா' மட்டுமே. 'லக்சா' எனக்குப் பிடிக்கும்.

சமீபகாலங்களில்  சீன உணவகங்கள் 'ஆளைப்பார்த்து'  செயல்படுகிறார்கள் என்று சிலர் சொல்லுகிறார்கள்.  சீனர்களை ஏமாற்ற வழியில்லை. மலாய்க்காரர் அங்குப் போவதில்லை. இந்தியர்கள் என்றால் ஏமாற்றுவது எளிது என்று நினைக்கிறார்கள். சமீபகாலங்களில் இந்தியர்களில் சிலர் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.  கெட்டுப்போன மீயைய் பயன்படுத்துவது,  புழு வைத்த மீயைய் பயன்படுத்துவது  இதெல்லாம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

இப்போது வியாபாரம் என்பது எதிர்பார்த்தபடி இல்லை என்றாலும்  அது எல்லா வியாபாரிகளுக்கும் பொதுவானது தான்.  உணவகம் மட்டும் தான் என்று சொல்லுவதற்கில்லை.  அதற்காக 'நான் போடுகிற உணவை நீ சாப்பிடு!  என்று  அதிகாரம் பண்ணுகிற அளவுக்குச் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.  எல்லா இந்தியரிடமும்  அது செல்லுபடியாகாது என்பது அவர்களுக்கே தெரியும்.  இளிச்சவாயர் யாராவது அகப்படுவார்களா என்று  காத்திருப்பர்  போல தோன்றுகிறது.

எது எப்படியோ இது கண்டிக்கத்தக்க விஷயம்.  ஆனாலும் இப்படிச் செய்து பழக்கப்பட்டவர்களைத்  திருத்த முடியாது.  நம்மால் முடிந்த ஒரே விஷயம்.  நாம் பழக்கப்பட்ட, அனுபவப்பட்ட சீன உணவகங்களுக்குப் போவது  கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கும்.   புதிய உணவகங்களுக்குப்  போவதை நாம்  தவிர்ப்பது நல்லது.   சீன உணவகங்கள் இந்திய வாடிக்கையாளர்களை நம்பி இல்லை  என்பது நமக்குத் தெரியும்.  அதனால் நாம் போகவில்லை என்றாலும் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும்  வரப்போவதில்லை.

அல்லது கொஞ்சம் நேர்மறையாக சிந்திப்போம்.  அவர்கள் செய்கின்ற  அடாவடியினால்  நாம் நமது உணவகங்களை ஆதரிப்போமே.  என்ன வந்துவிட்டது!   நமது வியாபாரங்களை நாம் ஆதரிப்பது ஒன்றும் தவறில்லையே.  இனி வருங்காலங்களில்  இப்படித்தான் நாம் யோசிக்க வேண்டியுள்ளது.  

யோசித்துச் செயல்படுங்கள்!

No comments:

Post a Comment