Pages

Thursday, 21 November 2024

என்ன பண்ணி கிழிச்சீங்க?


பொதுவாக நம நாட்டு இந்திய அரசியல்வாதிகளைப் பற்றி நிறையவே தெரிந்து வைத்திருக்கிறோம்!

இவர்கள் எல்லாம் உலகிலேயே மிக  மிக யோக்கியமானவர்கள்  என்று நாம் நினைத்ததில்லை.  அவர்களுக்கும் அந்தத் தகுதி இல்லை  என்பது அவர்களுக்கே தெரியும்.

ஆளுங்கட்சியில் இருக்கும் போது தலை நிமிராமல் தரையைப் பார்ப்பதும் எதிர்கட்சியில் இருக்கும் போது  தலைநிமிர்ந்து  ஆகாயத்தைப் பார்ப்பதும்,, மார்தட்டுவதும் அவர்களுக்குக் கைவந்த கலை என்பதையும் நாம் புரிந்து வைத்திருக்கிறோம். 

நஜிப், அவருடைய பதவி காலத்தில்,  மலேசிய இந்தியர் பெருந்திட்ட்த்தை வரைந்து  அதன்வழி  இந்திய மாணவ்ர்கள்   உயர்கல்வி நிலையங்களில் 7 விழுக்காடு  ஒதுக்கீடும்  அத்தோடு  உத்தரவாதமும் வழங்கப்பட்டது என்பதையறிய நமக்கும்  மகிழ்ச்சியே.  அத்தோடு அந்தத் திட்டத்தின் வழி  பொதுச்சேவைத்துறையில்  7 விழுக்காடும், மெட் ரிகுலேஷன்  கல்வியில் 2200 இடங்களும் ஒதுக்கப்பட வேண்டும்  என்கிற அறிவிப்பும் இடம் பெற்றிருந்தது.  அதிலும் நமக்கும் மகிழ்ச்சியே!

இந்த அளவு திட்டங்கள் வரைந்தும் ஏன் எதுவும் எடுபடவில்லை? செயல்படுத்தப்பட முடியவில்லை?  இவைகள் எல்லாம் அரசாங்கத்தின் ஏமாற்று வேலை என்பதைக் கூடவா  அந்த அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள முடியவில்லை? பல ஆண்டுகளாக பிரதமர் சொல்லுவதும்  நாம் கேட்டு மகிழ்ச்சியடைவதும் நமக்கு என்ன புதிதா?  இவைகளெல்லாம் நடைமுறைக்கு வரப்போவதில்லை என்பது  இவர்களின் தலைவர்களுக்குத்  தெரியும்.  அதனால் குரல் எழுப்புவதில்லை!

இந்த அளவுக்கு அக்கறை காட்டும் இவர்கள் அந்தப் பெருந்திட்டம்  பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்கிற அக்கறையை ஏன் இவர்கள் காட்டவில்லை?  பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்பது மட்டும் இவர்களுக்கு எப்படித் தெரியாமல் போகும்?  ஆனால் ஆண்டுக் கூட்டங்களில்  மட்டும் சிறுந்திட்டம், பெருந்திட்டம்  என்று பிரதமரிடம் மகஜர் கொடுப்பது  மட்டும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்களே அந்த அளவு வெட்கங்கெட்ட ஜென்மங்களா இவர்கள்?

என்னா படிச்சீங்க,  என்னா கிழிச்சீங்க என்று நாம் தான் தலையில் அடித்துகொள்ள வேண்டியிருக்கிறது!

No comments:

Post a Comment