நான் வாங்கிய முதல் ஆங்கில இதழ் என்று எடுத்துக் கொண்டால் அது கதோலிக்க திருச்சபயின் வெளியிடான Malayan Catholic News அல்லது (MCN) என்று சுருக்கமாகச் சொல்லுவார்கள். அது ஒரு மாத இதழாக வெளிவந்தது. அதன் விலை 15 காசுகள் என நினைக்கிறேன்.ஒவ்வொரு மாதமும் பள்ளியில் கொ9ண்டுவந்து விற்பார்கள். இப்போது இந்த இதழ் ஒரு பக்கம் தமிழ், ஒரு பக்கம் சீனம் தொண்ணூறு விழுக்காடு ஆங்கில இதழாக Herald என்னும் பெயரில் வெளிவந்து கொண்டிருக்கிறது.
நான் எத்தனையோ தமிழ் இதழ்கள் படித்தாலும் ஆங்கிலத்தில் எனது ஆரம்பம் அங்குதான் துவங்கியது. அது என்னவோ பத்திரிக்கைகள் மீது எனக்கு ஒர் அதீத ஈடுபாடு என்றும் உண்டு. நான் இடைநிலைப் பல்ளியில் பயிலும் போது ஏகப்பட்ட பத்திரிக்கைகளை நான் படிப்பதுண்டு.புரிகிறதோ இல்லையோ முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம்வரை படித்து விடுவேன்.
நான் வாசிப்பதில் ஒரு தீவிரவாதி! எதையும் படிப்பேன். எல்லாவற்றையும் படிப்பேன். வாசிப்பதில் எனக்கு வஞ்சனையே இல்லை! என்னிடம் இருக்கும் புத்தகங்கள் எல்லாம் என் காசில் வாங்கியவை. எல்லாமே அறுபது ஆண்டுகளாக நான் சேகரித்தவை. பல புத்தகங்கள்.
அறிவோம்" பயஙகரமான போராட்ட ஆயுதங்கள் எவை என்று கேட்கப்பட்டபோது மார்ட்டின் லூதர் கிங் "புத்தகங்கள் தான்" என்றாராம்.
No comments:
Post a Comment