பொதுவாவே தோட்டம்விட்டு இன்னொரு தோட்டம் மாறிப் போவது என்றால் இப்போது போல வாகன வசதிகள் இல்லாத காலம் அது. அப்படி ஒன்றும் பெரிய அளவில் சாமான்கள் இருக்கப்போவதில்லை.. என்றாலும் குறைந்தபட்சம் துணிமணிகள் வைப்பதற்கு ஒரு பெரிய டிரங் (Trunk}பெட்டியாவது இருக்கும். பொக்கிஷங்களை வைக்கும் பெட்டி அது தான்!
எங்களுக்கு வேறு வசதிகள் இல்லாத்தால் ஒரு மாட்டு வண்டியைத் தான் ஏற்பாடு செய்தார் என் தந்தை. அது ஒரு மலாய்க்காரருடைய மாட்டுவண்டி. அந்த வண்டியின் மூலம் தான் எங்களது சட்டிப்பானைகளைத் தூக்கிக்கொண்டு எங்களையும் அடைத்துக் கொண்டு வேறு தோட்டத்திற்கு மாறிப்போனோம்!
இந்த மாட்டுவண்டிகளைப் பற்றி சொல்லியாக வேண்டும். இந்த மாட்டுவண்டிகள் பெரும்பாலும் மலாய்க்காரர்கள் தாங்கள் செய்யும் அத்தாப்புக்களை (கூரைகளுக்குப் பயன்படுத்த) விற்பனைக்குச் சிரம்பான் நகருக்குக் கொண்டு செல்வார்கள். இரவும் பகலும் பயணம் செய்வார்கள். ஐந்தாறு வண்டிகளாக ஒன்றுசேர்ந்து பயணம் செய்வார்கள். அதன் பின்னர் அவர்கள் கொண்டு செல்லும் அத்தாப்புகளை விற்றுவிட்டு வீடு திரும்புவார்கள். அத்தாப்புகள் வீட்டுக் கூரைகளுக்குத்தான் என்றாலும் தோட்டங்களில் மாட்டுக்கொட்டைகளுக்கும் பயன்படுத்தாவர்கள்.
நான் முதலில் பார்த்தவை மலாய்க்காரர்களின் மாட்டுவண்டிகளைத்தான். பின்னர் றான் பட்டணங்களில் பஞ்சாபியர் நடத்தும் மாட்டுவண்டிகளைப் பார்த்திருக்கிறேன். பஞ்சாபியரை நினைக்கும் போது பசு மாடு, மாட்டுவண்டி - அதுவே அவர்களின் முன்னேற்றமாக அமைந்தது.
அறிவோம்: எதிரிகளாலும் நிராகரிக்க முடியாத தகுதிகளை வளர்த்துக்கொள். அதற்காகவே உன்னைத் தயார்படுத்து. அதுவே தலைசிறந்த உருவாக்கம்.
ரத்தன் டாட்டா
No comments:
Post a Comment