தமிழ் நாட்டில் பல துலக்க வேப்பங்குச்சியைப் பயன்படுத்துவார்களாம். இப்போது அல்ல. அந்தக் காலத்தில். ஒரு வேளை கிராமப்புறங்களில் இப்போதும் இருக்கலாம்.
ஆரம்பகால தோட்டப்பாட்டாளிகளாக இங்கு வந்த தமிழர்கள் இந்த அடுப்புக்கரியை பல்துலக்க எங்கிருந்து கற்றுக் கொண்டார்கள்? அதுவும் வெள்ளைக்காரனின் கைவரிசையாக இருக்குமோ? அல்லது அவனும் அடுப்புக்கரியில் தான் பல்துலக்கினானோ?!
எப்படியோ நான் நீண்ட காலம் அடுப்புக்கரியில் தான் பல் துலக்கினேன். அதாவது அடுப்பில் கரி இருக்கும்வரை! ஒரு வேளை நானே வேலைக்குப் போக ஆரம்பித்தபின்னர் நான் மாற்றிக்கொண்டேன் என நினைக்கிறேன்.
இதே கதைதான் தலைக்குத் தேங்காய் எண்ணெய் வைப்பதும். அதில் ஓர் அசௌகரியம் உண்டு. எண்ணைய் முகத்தில் வழியும். அதனால் நான் இடைநிலைப்பள்ளியில் படிக்கும் போது Hair Cream - க்கு மாற்றிக் கொண்டேன். நான் நீண்ட காலம் பயன்படுத்திய ஒரே கிரீம் என்றால் அது Bryl Cream மட்டும் தான். நான் அவ்வளவு எளிதில் எதனையும் மாற்றிக்கொள்ள மாட்டேன்.
அந்த காலகட்டத்தில் எல்லாமே வெள்ளைக்கரர் தேசதிலிருந்து தான் வெளிநாட்டுப் பொருள்கள் வரும். அதனால் விற்பனையில் அவர்கள் பொருள்கள் தான் முதன்மையான இடம் பெரும். ஆனால் மக்களுக்கு வாங்கும் சக்தி இருந்ததா என்பது தெரியவில்லை.
அறிவோம்: பொருளாதாரத்தில் நாம் பின்னடைந்த சமுதாயம் என்று பெயர் எடுத்துவிட்டோம். சீனர்கள் தொழில் செய்ய ஆரம்பிக்கும் முன்னரே நாம் தான் தொழிலில் முன்னணியில் இருந்தவர்கள். இப்போதும் வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. வாய்ப்புகள் பரந்து கிடக்கின்றன. இப்போது தான் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில் தீவிரம் காட்டுகிறோம். வாழ்க! வளர்க!
No comments:
Post a Comment