இன்றைய தலைமுறையினருக்கு நாக்குப்பூச்சி என்றால் என்னவென்று தெரிய வாய்ப்பில்லை!
அது அந்த அளவுக்குத் தேவைப்படவில்லை. ஆனால் அந்த காலகட்டத்தில் நான் வசித்தசெண்டயான் தோட்டத்தில் அது கட்டாயம் என்கிற நிலைமையில் இருந்தது. அது ஏன் என்பது தெரியவில்லை.
பிரச்சனை என்பது இது தான். மாதத்திற்கு ஒரு முறை சிறுவர்களுக்கு வயிற்றைச் சுத்தம் செய்வதற்காக விளக்கெண்ணய் கொடுப்பார்கள். ஒவ்வொரு மாதமும் இது நடக்கும். மற்ற தோட்டங்களில் இப்படி நடந்ததா என்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்த தோட்டத்தில் மட்டும் அந்த அநியாயம் நடந்தது! அதைக் குறையாகப் பார்த்தாலும் விளக்கெண்ண்யை சாப்பிட்டுவிட்டு உட்கார்த்தால் நீட்டு நீட்டு நாக்குப்பூச்சிகள் வந்து விழுவது மட்டும் உறுதி.
இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தால் சீனி அதிகம் சாப்பிடுவதால் வருகிற கோளாறு என்கிறார்கள். அந்த கஷ்ட காலத்தில் சீனி அப்படியென்ன கொட்டியா கிடந்திருக்கும்?அது சரியோ தவறோ நாக்குப்பூச்சி என்பது உண்மை!
விளக்கெண்ணெய் எங்கிருந்து வந்தது என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் மாதாமாதம் வந்து கொண்டிருந்தது என்பது மட்டும் உண்மை. தோட்ட நிர்வாகம் கொடுத்ததா என்பது தெளிவில்லை. அந்தத் தோட்டத்தை விட்டு வெளியேறிய பின்னர் இந்த விளக்கெண்ணெய் பிரச்சனை எழவில்லை! ஏன்? அதன் பின்னர் விளக்கெண்ணெய் சாப்பிட்டதாக நினைவில் இல்லை.
அறிவோம்: ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ ஒரு பிரச்சனை மனிதகுலத்தை ஆட்டிப்படைக்கத் தான் செய்யும். ஆனால் அவற்றுகெல்லாம் மனிதன் தீர்வைக் காணாமல் இருந்ததில்லை. அப்போதும் சரி இப்போதும் சரி எல்லாவற்றுக்கும் தீர்வுகள் உண்டு.
No comments:
Post a Comment