முதன் முதலாக எனது கண்பார்வையில் குறைவு ஏற்பட்ட போது என்னுடைய வயது பதினாறு. வகுப்பில் கரும்பலகையில் ஆசிரியர் எழுதுவதைப் பார்க்க முயாமல் போயிற்று.
அப்போது தான் சிரம்பான் மருத்துவமனைக்குச் சென்று கண்களைப் பரிசோதிக்க வேண்டி வந்தது. கண் டாக்டர் ஓர் வெள்ள்க்காரர். மலேசிய மருத்துவர்கள் இல்லாத காலம்.
இன்றைய நவீன வசதிகள் அப்போது இல்லை. பொதுவாக அனைவரையும் ஒரு பெஞ்சில் உட்கார வைத்து முன்னால் உள்ள எழுத்துகள் தெரிகின்றனவா என்று பார்ப்பார்கள். என் பக்கத்தில் ஒரு சீன பாட்டி உட்கார்ந்திருந்தார். என்ன அதிசயம் என்றால் அந்தப் பாட்டியின் பார்வை திறனும் என்னுடைய பார்வை திறனும் சமமாகவே இருந்தது!
அன்றைய காலகட்டத்தில் ஒரே ஒரு தனியார் கண் கிளினிக் தான். அதை நடத்தியவர் டாக்டர் தாரா சிங் என்கிற பஞ்சாபியர். கண் டாக்டர் மட்டும் அல்ல மூக்குக் கண்ணாடிகளும் அங்கு விற்பனைக்கு இருந்தன. சிரம்பானில் வேறு எங்கும் கிடைக்க வழியில்லை. அங்கு நான் முதன் முதலாக வாங்கிய கண்ணாடியின் விலை 45 வெள்ளி. அதாவது 1956-ம் ஆண்டு கண்ணாடியின் அன்றைய விலை! அப்போதெல்லாம் மூக்குக் கண்ணாடிகள் ஏதோ பணக்காரர் வீட்டு அலாங்காரப் பொருளாகப் பார்க்கப்பட்டன!
அன்றைய டாக்டர் தாரா சிங்கின் அந்தக் கிளினிக் இ[ப்போதும் கண் கிளினிக் தான். இப்போது அது கைமாறிவிட்டது, தமிழர்களின் கையில்.
அறிவோம்: அறிஞர் பெர்னாட்ஷா சுமார் 94 ஆண்டுகள் நல்ல ந;லத்தோடு வாழ்ந்தவர். கண்களில் எந்தப் பிரச்சனையும் இல்லை. நாள்தோறும் கையில் புத்தகங்களோடும், பேனாவோடும் எழுதிக்கொண்டும் படித்துக் கொண்டும் இருந்தவர். கண்களை நீரில் தொடர்ந்து கழுவி வந்ததால் மங்காத பார்வை பெற்றிருந்தார்.
No comments:
Post a Comment