முன்பெல்லாம் பலவிதமான விளையாட்டுகளை நாம் விளையாடி வந்தோம்.
பல விளையாட்டுகளின் பெயர்களே மறந்து போயின. எல்லாமே தமிழ் நாட்டிலிருந்து வந்த விளையாட்டுகள் தாம்.
சடுகுடு, கோலாட்டம், பம்பரம் விடுதல், குண்டு விளையாடுதல், தாயம் விளையாடுதல், நொண்டியடித்தல், பல்லாங்குழி ஆட்டம் - அதற்கு மேல் ஞாபகத்திற்குக் கொண்டுவர முடியவில்லை. விளையாட்டுகள் எல்லாம் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு விளையாட்டு. அதிகமாக ஆடும் ஆட்டம் என்றால் பம்பரம், குண்டு விளையாடுதல். எப்போதும் விளையாடுவது அல்ல. அதற்கும் ஒரு காலம் உண்டு!
சமீபத்தில் விடியோ ஒன்றைப் பார்த்த போது ஆப்பிரிக்க பழங்குடி மக்கள் தாயம், நொண்டியடித்து விளையாடுவதைப் பார்த்தேன். ஆச்சரியம் என்னவென்றால் நமக்கு இந்த விளையாட்டெல்லாம் மறந்து போய் விட்டன. பழைய விளையாட்டுகள் மறந்து போயின என்றால் புதிய விளையாட்டு மட்டும் விளையாடுகிறோமா? அதுவுமில்லை! சோம்பேறித்தனம் தான் அதிகமாக வளர்ந்துவிட்டது
ஓடி விளையாடு பாப்பா என்றார் பாரதி. இப்போது ஓடுவதும் இல்லை ஆடுவதும் இல்லை, வில்லாடுவதும் இல்லை விளையாடுவதும் இல்லை - எல்லாவற்றிலுமே ஒரு தேக்கநிலை. பெற்றோர்களும் அதை அனுமதிப்பதுமில்லை. வருங்காலங்களில் வேறு பெயர்களில் "ஓடி விளையாடு பாப்பா" வரலாம். வராமலும் போகலாம்.
அறிவோம்: "நான் சுமார் 1500 ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். 500 க்கு மேற்பட்ட பந்தயங்களில் பரிசுகளைப் பெற்றிருக்கிறேன். ஆனால் நான் 1500 போட்டிகளில் கலந்து கொண்டதுதான் எனது வெற்றிக்குக் காரணம்." பேராசிரியை பர்வீன் சுல்தானா.
No comments:
Post a Comment