பன்றி வேட்டை என்பதெல்லாம் அப்போது அடிக்கடி நடக்கும். அதற்காகவே வேட்டை நாய்களை வளர்ப்பார்கள். வேட்டை நாய்கள் உண்டா என்பதே தெரியாது. அது சாதாரண தெரு நாய்களாகக் கூட இருக்கலாம். தெரு நாய்களை வேட்டை நாய்களாக மாற்றும் திறமை எல்லாம் அவர்களுக்கு உண்டு! எல்லாம் காலத்தின் கட்டாயம்!
பன்றி வேட்டை அடிக்கடி நடைபெறும். இப்போது துப்பாக்கிகளைப் பயன்படுத்தி எளிதாகக் காட்டுப்பன்றிகளை சுட்டுத் தள்ளிவிடுகிறார்கள். ஆனால் கையில் ஈட்டியை வைத்துக் கொண்டு பன்றிகளை விரட்டி ஈட்டியால் குத்தி அவைகளைக் கொல்ல வேண்டும். உயிரோடு பிடிப்பதெல்லாம் இயலாத காரியம். அது கடினமான வேலை தான். நாம் தான் கடினமான வேலைக்கெல்லாம் அஞ்சாதவர்கள் ஆயிற்றே!
பின்னர் தோட்டத்தில் அந்த இறைச்சியை விற்றுவிடுவார்கள். அவ்ர்களிடம் நாங்களும் வாங்கும் பழக்கம் உண்டு. பன்றியைத் தேடிப் போகும் போது சமயங்களில் உடும்பு, அலுங்கு (எறும்புத்திண்ணி) போன்றவைகளும் கிடைக்கும். எல்லாமே சாப்பிடக் கூடியவைகள் தானே? அப்படித்தான் நான் நினைக்கிறேன்.
காட்டுப்பன்றிகள் பயங்கரமான ஒரு மிருகம். வேட்டை நாய்கள் இல்லாவிட்டால். மனிதர்களை அது கொன்றுவிடும். எந்த அசம்பாவிதமும் நடந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை. வீரப்பரம்பரை ஆயிற்றே!
இதனைப் பொழுது போக்காகவும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது வீர விளையாட்டாகவும் எடுத்துக் கொள்ளலாம். உண்மையில் பன்றி வேட்டை உணவுக்கான வேட்டை!
அறிவோம்: 5300 ஆண்டுகளுக்கு முன் உலகிலேயே முதன் முதலாக இரும்பைக் கண்டுப்பிடித்த தமிழர்களாகிய நாம் மிருகங்களைக் கொல்ல ஈட்டிகளைத்தானே பயன்படுத்தினோம். நமக்கு இது புதிதல்ல.
No comments:
Post a Comment