Wednesday 6 January 2016

காரில் சிக்குகின்ற குழைந்தைகள்!


காரில் சிக்குகின்ற குழந்தைகளின் எண்ணீக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகின்றன.

கடைசியாக இரு தினங்களுக்கு முன்னர் 17 மாத குழந்தை ஒன்று காரில் அகப்பட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாயின. தாய் குழந்தையிடம் கார் சாவியை சும்மா ஜாலிக்காக குழந்தையின் கையில் கொடுத்து விளையாட வைத்து விட்டு வெளியே போக அந்தக் குழந்தையோ தெரியாத்தனமாக எதனையோ அமுக்க,  கார் உள்ளே பூட்டிக் கொண்டது.

பின்னர் தாய் அங்குள்ள தற்காப்புப் படையினரிடம் பிரச்சனையைக் கொண்டு செல்ல அவர்கள் வந்து குழந்தையை மீட்டெடுத்தனர்.

காரினுள் உள்ள குழந்தைகளிடம் கார் சாவியைக் கொடுத்து விளையாட வைப்பது ஆபத்திலும் ஆபத்து என்பதை  இன்னும் நமது இளம் பெற்றோர்கள் புரிந்து கொள்ளவில்லை.

இதே போன்று என் கண் முன்னே நடந்த ஒரு நிகழ்வை நான் சொல்லியே ஆக வேண்டும்.

காரின் உள்ளே கைக்குழந்தை. நல்ல தூக்கம் பையன் பெரியவன். விவரமானப் பையன். அவன் குழந்தைக்குக் காவல்.  பையனிடம் உள்ளே பூட்டிக்கச் சொல்லி விட்டு, சாவியையும் அவனிடமே கொடுத்துவிட்டு  அந்தத் தாய் கடைக்குச் சென்று பொருள்களை வாங்கிக்கொண்டுத்  திரும்பினார்.

பிரச்சனை ஒன்றுமில்லை. பையன் உள்ளே தூங்கிக் கொண்டிருந்தான்! தூக்கமோ தூக்கம்! கும்பகர்ணன் தூக்கம்! அவன் தூக்கத்தை யாராலும் அசைக்க முடியவில்லை! காரைச் சுற்றி பெரிய கூட்டம். அனைவரும் சேர்ந்து கதுவுகளைத் தட்டியும், சத்தம் போட்டும், கத்தோ கத்து என்று கத்தியும் ......ஊகூம் ....பையன் அசையவில்லை! காரின் கதவை உடைப்பதைத் தவிர வேறு வழி இல்லை! அந்தத் தாயோ காரின் கதவை உடைக்க வேண்டாம், அசிங்கமாகப் போகும் என்கிறார்!

கடைசியாக "நீயாச்சி,உன் பிள்ளை ஆச்சி" என்று ஒருவர் பின் ஒருவராக களைய ஆரம்பித்தார்கள்.

பின்னர் கண்ணாடியை உடைக்க அவர்  ஒத்துக்கொள்ள கண்ணாடியை உடைத்து பையனிடம் உள்ள சாவியைப் பிடுங்கி பையனை ஒரு மொத்து மொத்தி காரை எடுத்துக் கொண்டு போனார்!

பெற்றோர்களே! சிறு குழந்தைகளிடம் கார் சாவியைக் கொடுப்பதைத் தவிருங்கள்.


No comments:

Post a Comment