Friday 4 August 2017

மகாதிர் த/பெ இஸ்கந்தார் குட்டி


முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் மீதான சில பரபரப்பான செய்திகள் வெளியாகிக் கொண்டிருப்பதால் நாமும் அவரைப் பற்றியான சில உண்மைச் செய்திகளை - அதுவும் அவருடைய இந்தியப் பின்னணியை - கொஞ்சம் ஆராய்வோம்.

மகாதிர் 1925 - ம் ஆண்டு பிறந்தவர். கெடா மாநிலத்தில், செபாராங் பேராக் என்னும் கிராமமே அவரின் சொந்த ஊர். பிறக்கும் போது அவர் வெறும் மகாதிர் தான். அவரின் தந்தையாரின் பெயர் வெறும் இஸ்கந்தார் குட்டி தான். இந்த குட்டி என்பது இந்தியாவின், கேரள மக்களிடையே பிரபலமான ஒரு பெயர். நம்மைச் சுற்றிப் பார்த்தால் ராமன் குட்டி, கிருஷ்ணன் குட்டி என்னும் பெயர்கள் உள்ளவர்களை இப்போதும் பார்க்கலாம். இஸ்கந்தார் குட்டி கேரளாவிலிருந்து வந்தவர். ஆசிரியராகப் பணி புரிந்தவர்.  இங்குள்ள மலாய்ப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டவர். அவர்களுக்குப் பிறந்தவர் தான் மகாதிர்.

மகாதிர், தனது சீனியர் கேம்பிரிட்ஜ் கல்வியை முடித்த கையோடு சிங்கப்பூரில் உள்ள  மருத்துவக் கல்லூரியில் மாணவனாக சேர்ந்தார். அவர் மாணவனாகச் சேர்ந்த போது அவர் தன்னை "இந்தியன்" என்பதாகவே அடையாளப் படுத்திக் கொண்டார். அதுவே இன்றளவும் அவரை இந்தியன் என்றே அவர்களின் பதிவுகளில் குறிக்கப் பட்டிருக்கிறது. ஒரு  வேளை அவரின் தந்தையார் "இந்தியன்" என்னும் அடையாளத்தை இழக்க விரும்பாதவராக இருந்திருக்கலாம். அல்லது இப்போதைய நடைமுறை அப்போது இல்லாமல் இருந்திருக்கலாம். இரண்டுமே சாத்தியமே!

மகாதிர் 1962-ம் ஆண்டு தனது தந்தையார் இறந்த பின்னர் தனது "இந்தியன்" என்னும் அடயாளத்தை மாற்றி அமைத்தார். அவரின் தந்தையாரின் பெயரை முகமது பின் இஸ்கந்தார் ஆகவும் தனது பெயரை மகாதிர் பின் முகமது என்றும் தன்னை முழு மலாய்க்காரராக வெளி உலகிற்குக் காண்பிக்க ஆரம்பித்தார். அத்தோடு அவரின் இந்தியர் என்னும் பாரம்பரியமும்  ஒரு முடிவுக்கு வந்தது.

இங்கு நாம் ஒன்றைக்  குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். கேரள மக்கள் எல்லாக் காலங்களிலும் பிள்ளைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அதன் பயனாகத்தான் இஸ்கந்தார் குட்டி தனது மகன் மகாதிரை டாக்டர் ஆக்கினார். அவர் முகமது பின் இஸ்கந்தார் ஆக இருந்திருந்தால் இவர் டாக்டராக இருந்திருக்க வழியில்லை! பிரதமராகவும் ஆகியிருக்க மாட்டார்!

அது சரி,  இவர் பிரதமராக இருந்த போது செய்த மாபெரும்  குற்றம் என்ன? தன்னை மலாய்க்காரர் எனக் காட்டிக் கொள்ளுவதற்காக இந்திய சமுதாயத்தை படுகுழியில் தள்ளியவர். இந்தியர்களின் பொருளாதாரத்தை முற்றிலுமாக ஒழித்தவர். உயர்கல்விக் கூடங்களில் இந்திய மாணவர்களுக்கு இடம் தர மறுத்துவர். இவர் செய்த தவறுகளால் தான் இன்று இந்திய சம்தாயம் எல்லாத் துறைகளிலும் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இந்தியர்களின் அனைத்து உரிமைகளையும் மலாய் சமுதாயத்திற்குத் தாரை வார்த்துக் கொடுத்தவர்.

இது போதும்! வேறு என்ன சொல்ல? இவர் மகாதிர் பின் முகமதாக பிறக்காதது இந்தியர்களின் சாபக்கேடு!

No comments:

Post a Comment