Tuesday 20 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.........! (35)

 தொழிலின் முதல் பாடம்

                                                            Little India, Kuala Lumpur

தொழிலின் முதல் பாடம் என்பது முக்கியம். தொழிலில் எந்த அளவுக்கு நம்மால் வெற்றி பெற முடியும் என்கிற தீவிரம் நம்மிடம்  இருக்கிறதோ அதே போல தோல்விகளும் வரும் என்கிற எண்ணமும் நமக்கு ஏதோ ஓரு மூலையில் இருக்க வேண்டும்.

அதாவது 95% விழுக்காடு வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை நமக்கு இருப்பது போல ஒரு 5% விழுக்காடு "கவிழலாம்" என்கிற எண்ணமும் நமக்கு இருக்க வேண்டும்.

இங்கு "கவிழலாம்" என்பது நமக்குள்ள எச்சரிக்கை! மனதிலே,  கவிழலாம், தோல்வி அடையாளம் என்பது தவறுகளைச் செய்யாமல் இருக்க நமக்குள்ள எச்சரிக்க உணர்வு நமக்கு உதவுகிறது. தோல்வி என்கிற பய உணர்வு நமக்கு ஒர் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்துகின்றது.

தொழிலில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்கும் வரை நம்மிடையே உள்ள அந்த பய உணர்வு ஒரு எச்சரிக்கை உணர்வாகவே இருந்து கொண்டு நமக்குப் பாதுகாப்புக் கொடுக்கும்.

பெருந் தொழிலில் உள்ளவர்கள் தங்களது முதலீடுகளைப் பல்வேறு வகைகளில் முதலீடு செய்கிறார்கள் என்றால் 'அது போனால் இது காப்பாற்றும், இது போனால் அது காப்பாற்றும்' என்கிற பய உணர்வு தான் அவர்களுக்கு அந்த எச்சரிக்கையைக் கொடுக்கிறது. அதனால் தான் இன்று நாம் பார்க்கும் தொழில் அதிபர்கள் பல்வேறு தொழில்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.

சான்றுக்கு ஒன்றைச் சுட்டிக் காட்டுகிறேன். பிரபல சூதாட்ட மையமான  கெந்திங் ஹைலன்ஸை எடுத்துக் கொள்ளலாம்.  கோவிட்-19 க்குப் பின்னர் அவர்கள் நூறு விழுக்காடு முடங்கிப் போனார்கள். ஆனால் அவர்களின் இன்னொரு முதலீடான தோட்ட நிறுவனங்கள் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பாதுகாப்பாக இருந்தது!

நாம் என்ன தான் வெற்றிக்கொடி நாட்டினாலும் நம் எல்லாருக்குமே அந்த எச்சரிக்கை உணர்வு அவசியம் தேவை. `இன்று உணவகத் தொழிலில் இருக்கும் பலர் ஆள் பற்றாக்குறை என்று அலறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மற்ற முதலீடுகள் அவர்களுக்கு வருமானத்தைத் தராமல் போகுமா, என்ன?

அதனால் முதல் கடமை எச்சரிக்கை என்பது தான். அந்த எச்சரிக்கை நம்மை கீழே விழுந்து விடாமல் பார்த்துக் கொள்ளும். அடுத்து நம்மை நாமே நிலை நாட்டிய பின்னர் மற்ற முதலீடுகளில் கவனம் செலுத்த வேண்டும்.

வாழ்ந்து காட்டுவோம்!

No comments:

Post a Comment