Wednesday 14 October 2020

அம்னோவின் ஆதரவு தேவையா?

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் புதிய அரசாங்கம் அமைப்பதற்கு அம்னோவின் உதவி தேவையா என்கிற கேள்விகள் எழத்தான் செய்கின்றன,.

ஒரு சில அம்னோ தரப்பினர் "நாங்கள் அன்வாரோடு கூட்டு சேர்ந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை!" என்று வெளிப்படையாகவே சொல்லி வருகின்றனர். 

நமக்கு இந்த ஒத்துழைப்பில் சில சங்கடங்கள் இருந்தாலும் அன்வாருக்கு வேறு வழியில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

 சென்ற பொதுத் தேர்தலில் அம்னோவை ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற ஒரே இலட்சியத்தோடு தான் மக்கள் அவர்களை ஒழித்துக்கட்டினர். ஒரே காரணம் தான். அது ஒரு கொள்ளைக்கார கும்பல் என்பது மக்களுக்குப் புரிந்துவிட்டது!

ஆனால் இப்போது கொள்ளைக்கார கும்பலுடன் கூட்டுச் சேர்வது என்பது நம்மால் ஜீரணிக்க முடியாத ஒன்று. கொள்ளைக்காரக் கும்பல் இப்போது வெள்ளைக்காரக் கும்பலாகிவுட்டதோ!

ஒரு சில காரணங்களுக்காக இந்த கூட்டணியை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. இப்போது தேர்தல் வேண்டாம் என்கிறது  பக்காத்தான். இப்போது தேர்தல் வேண்டும் என்கிறது அம்னோ.  நேரம் நல்ல நேரம் என்கிறது அம்னோ.  "ஆளும் அதிகாரத்தை மக்கள் எங்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். அது தொடர வேண்டும்" என்கிறது பக்காத்தான். 

"தேர்தல் என்றால்  கோடிக்கணக்கில் பணம் செலவாகும். தீடீர்த் தேர்தல் தேவை இல்லை!" என்கிறார்கள் பொது மக்கள்.

இந்த கூட்டணியின் மூலம் அம்னோ எதைச் சாதிக்க விரும்புகிறது? தங்களுக்கு  நல்ல பெயர் கிடைக்கும் என நினைக்கிறார்களா? அல்லது இப்போது  ஆளும் பெரிகாத்தானைப் பயமுறுத்திக் கொண்டிருப்பது போல, அன்வார் தலைமையில் அரசாங்கம் அமைந்தால்,  தொடர்ந்து பயமுறுத்தி அரசாங்கத்தை முடக்கலாம் என்று நினைக்கிறார்களா? 

அப்படி ஒரு நிலை வராது என்றே நான் நினைக்கிறேன்.  அம்னோவிலிருந்து குறிப்பிட்ட சிலர் தான் அன்வார் பக்கம் வருவார்கள் என நம்பலாம்.  ஆனால் இன்றைய பிரதமர் முகைதீன் படுகின்ற அவஸ்த்தை அன்வாருக்கு வராது என்பது உறுதி.

நல்லது நடக்க இது தான் வழி என்றால் அப்படியே ஆகட்டும் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

ஆனால் இது அம்னோ ஆதரவு சென்று சொல்ல இயலாது.  ஒரு சிலர் தனிப்பட்ட முறையில் அன்வாரை ஆதரிக்கின்றனர். அதனைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லையே!

No comments:

Post a Comment