Monday 11 March 2024

என்னடா கலிகாலம்!

 

                                                                       School Boys

காலையில் இந்த செய்தியைப் படித்த போது மனம் கனத்துப்  போனது. என்னடா கலிகாலம் இது.  பள்ளி மாணவனுக்கு இப்படி ஒரு நிலைமையா?

 இப்போதெல்லாம் யாருக்கு வேண்டுமானாலும்  மாரடைப்பு வரலாம்.  இப்போதும் கூட நம்மிடம் ஒரு தவறான புரிதல் உண்டு.  மாரடைப்பு என்றால் நாற்பது, ஐம்பது வயதுக்கு மேல் தான் வரும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அது என்னவோ இளஞ்சிறார்களுக்கும் வரும், குழந்தைகளுக்கும் வரும் என்றெல்லாம் செய்திகளில் படிக்கிறோம்.  ஆனாலும் அது என்னவோ மண்டையில் ஏறுவதில்லை.   இன்னும் வயதானவர்களுக்குத் தான் வரும் என்கிற எண்ணத்திலிருந்து விடுபட முடிவதில்லை.

ஒரு வேளை அது வயதானவர்களுக்கு அதிகம் வரும் என்பதில் உண்மை இருக்கலாம். அதிகம் பாதிக்கப்படுபவர்கள் அவர்கள் தான். அதனாலோ என்னவோ  மாரடைப்பு என்றாலே அது வயதானவர்களின் நோய் என்பது  மனதில் பட்டுவிட்டது.

ஆனாலும் ஓர் ஐந்தாம்  பாரம் படிக்கும் ஒரு மாணவன், வயது பதினேழு, என்று நினைக்கும் போது  இந்த இளம் வயதில் அவனுக்கு இப்படி ஒரு  மரணமா  என்று நினைக்கத் தோன்றுகிறது.   பையனைப் பற்றியான விபரங்கள் எதுவும் இல்லாததால்  ஒரு வேளை அளவுக்கு மீறிய உடல்வாகு  கொண்டவனாக இருக்கலாம்.  சாத்தியம் உண்டு. 

எது எப்படியிருந்தாலும் இன்னும் பள்ளிக்கல்வியைக் கூட முடிக்காத ஒரு மாணவன்  எத்தனையோ  கனவுகளைச் சுமந்து கொண்டிருந்திருப்பான். அனைத்தும் வீணாகிப்   போனது தான் மிச்சம்.

இளம் பருவத்தினருக்கு நம்முடைய ஆலோசனையெல்லாம் ஒன்று தான். உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள். ஓட்டப்பந்தயம், காற்பந்து, பூப்பந்து  போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுங்கள். உடல் ஆரோக்கியமாக இருக்க விளையாட்டுகள் அவசியம். கைப்பேசிகளை வைத்துக் கொண்டு தான் 'கேம்' விளையாடுவேன் என்றால் அற்ப ஆயுசோடு அனைத்தும் நாசமாகிவிடும்!

இளம் பருவம் ஓடி ஆடி விளையாட்டுகளில் ஆர்வத்தைக்காட்ட  வேண்டும்.  அசையாமல்  கைப்பேசிகளுக்கு அடிமையாகிப் போனால்  வாழ்க்கையே அஸ்தமனமாகி விடும்.

ஓ! இறைவா! இளசுகளுக்கு வழிகாட்டும்!

No comments:

Post a Comment