Wednesday 20 March 2024

இது தான் உண்மை!

 

                                                        வெளிநாட்டு தொழிலாளர்கள்

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டில் தேவைக்கு மேல்  குவிந்து கிடக்கின்றனர் என்பது ஒரு பக்கம்.  இன்னொரு பக்கம் 'அப்படியெல்லாம் இல்லை'   என்று ஒன்றும் தெரியாதது  போல  நடிப்பவர்கள் ஒரு பக்கம்.

இரண்டாவது நியாயவாதிகள்  வெளிநாட்டுத் தொழிலாளர்களை வைத்துத் தங்களின் வளத்தைப் பெருக்கிக் கொண்டவர்கள்! இவர்கள் தான் நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கும் குழப்பத்திற்குக் காரணம்.  ஆனால் அவர்களை யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை. அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்று பேசுபவர்கள்.

அரசாங்கத்தில் உள்ளவர்கள் தங்களின் பொறுப்பைத் தட்டிக்கழித்தால் இது தான் நடக்கும். 

நாட்டின் தேவைகளுக்கு வெளிநாட்டினரின் சேவை தேவை என்றால்  அதற்கு யாரும் எதிர்ப்பைத் தெரிவிக்கப் போவதில்லை. அளவுக்கு அதிகமானவர்களை நாட்டினுள் கொண்டுவந்து அவர்களின் கடப்பிதழ்களைப் பிடுங்கி வைத்துக் கொண்டு, அவர்களுக்கு வேலையும் கொடுக்காமல் அவர்களைப் பட்டினி போட்டுச்  சாகடிப்பதை  - யாருக்கும் அந்த  உரிமையை - அரசாங்கம் வழங்கவில்லை. 

ஆனால்  ஒருசிலர் அதனைத் தங்களின்  உரிமையாகக் கருதுகின்றனர்!  வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் பெரும்பாலும் ஏழைகள். தங்களது குடும்ப சொத்துகளை விற்றோ அடகு வைத்தோ இங்கு வருகின்றனர். இங்கு வந்த பிறகு அவர்கள் ஏமாற்றப்பட்டால்  அவர்களால் என்ன செய்ய முடியும்?  அறிமுகம் இல்லாத ஊரில்  அடங்கிப் போவதைத் தவிர  வேறு  என்ன தான் வழி?  

ஆனாலும்  அவர்களில் பலர் துணிச்சலோடு களத்தில் இறங்கினர். அதன் விளைவு தான் இன்று  அவர்கள் சிறு சிறு தொழில்களில் ஈடுபட்டு இன்று பெரும் தொழில்களில் வளர்ந்து இன்று மலேசியர்களுக்கு மிரட்டலாக விளங்குகின்றனர்!   

முதலில் வெளிநாட்டவர்களுக்கு வியாபாரம் செய்ய எந்த நாடும் உரிமம் கொடுப்பதில்லை. ஆனால் அவர்களுக்கு எல்லா சலுகைகளும்  இங்குக் கொடுக்கப்பாடுகின்றன.  உள்நாட்டவர்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.  எல்லாமே  இலஞ்சம் என்றால்  என்ன தான் செய்ய முடியும்?  

அரசாங்கம் இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு என்ன வழியைக் கையாளும் என்பது  நமக்குத் தெரியவில்லை.  அவர்களைப் போலவே நாமும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.  வெளிநாட்டவர் சிறு சிறு தொழில்களில் ஆழமுடன் வேரூன்றிவிட்டனர். இப்போது அவர்கள் உள்ளூர் வணிகர்களாகவும் வலம் வருகின்றனர்!

எல்லாம் நன்மைக்கே என்று சொல்லுவார்கள். இதுவும் நனமைக்குத்தான்!

No comments:

Post a Comment