பொதுவாகவே பல மலேசியர்களின் வீடுகளிலே பணிப்பெண்களின் சேவை மிக முக்கியம் என்கிற நிலைமையில் தான் இருக்கின்றனர். காரணம் இவர்களில் பலர் - கணவன் மனைவி - இருவருமே வேலை செய்து பிழைக்க வேண்டிய சூழல் தான் நிலவுகிறது.
நாம் அதுபற்றி குறை ஏதும் சொல்லப் போவதில்லை. ஆனால் வேலை செய்து பிழைக்கும் இவர்கள் தான் தங்களின் வீடுகளில் வேலை செய்யும் வேலைக்காரப் பெண்களிடம் எப்படியெல்லாம் அதிகாரம் பண்ணிக்கொண்டு அட்டுழியம் புரிவதை செய்திகளில் பார்க்கிறோம்.
நமக்கு வருத்தம் தான். நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணி புரிகிறீர்கள். உங்களின் நலன் காக்க சங்கங்கள் உண்டு. தொழிலாளர் அமைச்சு உள்ளது. உங்களுக்குப் பிரச்சனைகள் வரும் போது உங்கள் சங்கங்கள் உங்களுக்காகப் போராடும்.
ஆனால் இப்படி வேலையில் இருக்கும் உங்களுக்கு உங்கள் வீட்டில் பணி புரியும் வேலைக்கார பெண்களுக்கு நீங்கள் எந்தவொரு சலுகைகளும் கொடுப்பதில்லை. சலுகைகளை விடுங்கள். அவர்களுக்கான ஊதியம் கூட கொடுப்பதில்லை. உணவும் கொடுப்பதில்லை. ஏன் அவர்களை மனிதர்களாகக் கூட மதிப்பதில்லை. அவர்களோ வெளிநாட்டவர்கள். அவர்களுடைய கடப்பிதழை வாங்கி வைத்துக் கொள்கிறீர்கள். அவர்களை அப்படியே முடக்கிவிடுகிறீர்கள். அவர்களை உங்களுக்கு அடிமையாக்கி விடுகிறீர்கள். அவர்கள் சோம்பேறிகள் என்று முத்திரையும் குத்திவிடுகிறீர்கள். உடம்பில் காயத்தை ஏற்படுத்தி விடுகிறீர்கள்.
இப்படியெல்லாம் செய்ய உங்களுக்கு உரிமையில்லை என்றாலும் அதைத்தான் விரும்பி செய்கிறீர்கள். காரணம் அவர்கள் உங்கள் அடிமைகள் என்கிற முடிவுக்கு நீங்கள் வந்துவிடுகிறீர்கள். ஆனால் நேரம் எப்போதும் உங்களுக்குச் சாதகமாக இருக்கப்போவதில்லை. மாட்டிகொண்டால் உங்கள் பாடு அதோபாடு தான்!
அரசாங்கத்திற்கு நமது வேண்டுகோள் எல்லாம் இந்த நவீன முதலாளிகளைக் கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்த வேண்டும். அவர்கள் பணிப்பெண்களே வேண்டாம் என்கிற அளவுக்குத் தண்டிக்க வேண்டும்.
No comments:
Post a Comment