நம் நாட்டில் அரசாங்கத்தில் பணிபுரிபவர்கள் பலர் கசமுசா வேலை செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர்களாகவே இருக்கின்றனர்! அதுவும் குறிப்பாக இந்து கோவில்கள் என்றால் அவர்களுக்கு கற்கண்டு மாதிரி. சீனர்களின் கோவில்களோ, பள்ளிவாசல்களோ அவர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை. அப்படி ஒரு எளிமையான கணக்கை அவர்கள் போட்டு வைத்திருக்கின்றனர்! மற்றவர்களின் கோவில்களில் கை வைத்தால் செருப்படி விழும் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர்.
இன்று நம் நாட்டில் பிரச்சனைகள் உள்ள கோவில்களைப் பார்த்தால் எல்லாமே ஏதோ ஒரு வகையில் மாநில, நில அலுவலகங்கள் தான் சம்பந்தப்பட்டிருக்கின்றன. கோவில்களை உடைப்பதில் இவர்களுக்கு ஏன் அவ்வளவு அக்கறை? துட்டு கிடைத்தால் எவனும் எதையும் செய்வான்! அது தான் தெரிந்த கதையாயிற்றே!
இன்றைய நிலையில் இந்தியர்கள் பெரும்பாலும் பிரதமர் அன்வாரை ஆதரிப்பவர்களாக இல்லை. எதை எதையோ பேசுகிறார் ஆனால் உயர்கல்வியில் இத்தனை இந்திய மாணவர்களை அதிகரித்திருக்கிறேன், இத்தனை புதிய இந்திய வியாபாரிகளை உருவாக்கியிருக்கிறேன் என்று அவரால் சொல்ல முடியவில்லை. காரணம் அவர் செய்யவில்லை.
அரசாங்க அதிகாரிகள் செய்கின்ற தவறுகள் எல்லாம் பிரதமர் மீது தான் விழுகின்றன. கோவில் இடிப்பா, தமிழ் பள்ளிகளின் ஏதேனும் பிரச்சனைகளா, வேலை வாய்ப்புகள் இல்லையா மக்கள் என்ன சொல்லுகிறார்கள்? அன்வார் பதவிக்கு வந்த பிறகு தான் இப்படியெல்லாம் நடக்கின்றன என்று சொல்லுவதை தவிர்க்க முடியவில்லை. அவருக்குச் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவர் தான் இந்தியர்கள் மத்தியில் குற்றவாளி ஆகிறார்.
அதுவும் கோவில் பிரச்சனைகள் ஏராளம். இப்போது தான் அவைகள் பெரிதுப் படுத்தப்படுகின்றன. அன்வார் கோவில்களுக்கு எதிரானவர் என்கிற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். காரணம் அவரின் ஒரு சில நடவடிக்கைகள் அப்படியெல்லாம் சொல்ல வைக்கின்றது.
நமக்கும் சீ! இதென்னடா பிழைப்பு என்று சொல்ல வைக்கிறது. எப்போது பார்த்தாலும் இந்தியர்களை எதிரிகள் என்கிற தோற்றத்தையே ஏற்படுத்துகிறார்களே! என்ன செய்ய?
No comments:
Post a Comment