Monday 12 December 2022

தப்பிப்பாரா பிரதமர் அன்வார்?

 


வருகின்ற 15-வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் 19-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி முடிவடையும். 

இரண்டு நாள்களுக்கு நடைபெறும் இந்தத் தொடரில் முக்கியமான சில விஷயங்கள் பேசப்பட விருக்கின்றன.

அதில் முதலாவாது நிகழ்வாக சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். எட்டாவது நிகழ்வாக பிரதமர் அன்வார் இப்ராகிம் தனது பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும்.

பிரதமர் தனது பெரும்பான்மையை நிருபிப்பதுதான் இந்தக் கூட்டத்தில் மிகவும் பரபரப்பான செய்தி ஆமாம், இதனை நாம் அப்படி ஒன்றும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.

முன்னாள் பிரதமர் முகைதீன் அப்படி ஒன்றும் இலேசுபட்ட ஆளில்லை! ஆட்சியைக் கலைப்பதில் கைதேர்ந்தவர். அதனை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அவர் சுழி சும்மா இருக்காது. கட்சிதானே மாறக்கூடாது? ஆனால் 'முக்கியமான அலுவல் காரணமாக அல்லது திடீர் என மருத்துவமனையில் படுத்துக் கொண்டால்?  நாடாளுமன்றத்தில்  எண்ணிக்கையைக் குறைக்கலாமே! இது நமக்குத் தெரிந்த வழி!  முகைதீனோ கலைப்பதில் நிபுணர்! இன்னும் பல வழிகள் இருக்கலாம்!

நாடாளுமன்ற உறுப்பினர்களை மிக எளிதில் பணம் போட்டு வாங்கிவிடலாம்!  கொஞ்சம் அதிகம் செலவு ஆகும்! அதனால் என்ன?  பிரதமர் ஆக வேண்டும் என்றால் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாமே!  இதனை முதலீடாகத்தான் பார்க்க வேண்டும்! இதில் முதலீடு செய்வது பின்னர் பிரமாண்ட இலாபத்தைப் பார்க்கலாம்!

முன்னாள் பிரதமரின் எண்ணோட்டங்கள் மேலே சொன்னது போலத்தான் இருக்கும்! அவர் பதவியில் இருந்து அதன் ருசியைப் பார்த்தவர். அதனால் தான் நாடாளுமன்றத்தில் தனக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வேண்டாம் என்று சொன்னவர். அவருக்குப் பிரதமர் எனபதைத் தவிர வேறு எந்தப் பதவியையும் ஏற்கத் தயாராக இல்லை! அதற்காக எந்த வில்லத்தனமும் செய்யத் தயராக இருப்பவர். இப்போது மறைமுகமாக என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதும் வெளிப்படையாகத் தெரியவில்லை!

பிரதமர் அன்வார் மீதான நம்பிக்கை தீர்மானம் என்ன நிலையில்  இருக்கிறது என்பதும் தெளிவில்லை.எதிர்தரப்பை அவர் எப்படி எதிர்கொள்ளப் போகிறார், எப்படித் தயாராகிறார் என்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது.

எப்படியோ இருவருமே  கைதேர்ந்த அரசியல்வாதிகள். அவர்களுக்குப் புத்தி சொல்ல வேண்டிய அவசியமில்லை.  ஆனால் என்ன?  ஒன்று அழிவு சக்தி! ஆக்கப்பூர்வமானது எதுவுமில்லை! தகுதியில்லாத தகரடப்பா!  இன்னொருவர்: ஆக்க சக்தி! நாட்டு நலன், மக்கள் நலன் மீது அக்கறை உள்ளவர்.

தப்பிப்பாரா அன்வார்? என்றால் ஆம்! தப்பிப்பார! என்பதே பதில்!

No comments:

Post a Comment