Sunday 19 November 2023

நீதி, நியாயம் வேண்டும்!

 

உள்ளூர் துரித உணவகங்கள் இப்போது தங்களது அடையாளங்களை மாற்றும் வேலையில்  ஈடுபட்டுள்ளன. அதுவும் அவசர அவசரமாக!

என்னதான் எழுத்துகளில் சில மாற்றங்களைக் கொண்டுவந்து இதனை மலேசியப் பொருள் என்று சொன்னால் .....சரி!.........நம்புபவர்கள் நம்பட்டும்!  ஆனால் நமக்குப் பாலஸ்தீனம் தான் கடைசிவரை! அதில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த துரித உணவகங்கள்,  சரி,  ஏதோ ஓர் கோட்பாட்டை கடைப்பிடிக்கின்றன.  ஆனால் அதோடு அந்தப் பிரச்சனை முடிந்து விடவில்லையே.  உணவகங்கள் மட்டும் தானா!  பானங்கள் நம்மைச் சுற்றிச்சுற்றி வருகின்றனவே, அவைகளை என்ன செய்ய முடியும்? நம்மால் கொஞ்சமாவது தியாகம் செய்ய முடியுமா? அவைகளின் பெயர்களை மாற்ற முடியுமா?  ஒரு மண்ணும் வேண்டாம். வெறும் தண்ணிரை பாட்டல்களில் கொண்டு செல்லுகிறார்களே அதையாவது செய்ய முடியுமா? பெரும்பாலும் வெயில் தாங்க முடியாமல் வெறும் தண்ணீரை அருந்தும்  அந்த மனிதர்கள் தான் உயர்ந்தவர்கள். அதில் எந்த ஐயமும் வேண்டாம். 

எத்தனை பேர் அதனைச் செய்ய முடியும்? கொஞ்சம்  தாகம் என்றாலே உடனே கோக், பெப்சி என்று அலைவது யார்?  நியாயம் பேசும் அரசியல்வாதிகள்  தானே  அனைத்தையும் செய்கிறார்கள்  ஆமாம், இந்த நிறுவனங்களை எல்லாம் நடத்தும்  உள்ளூர் முதலாளிகள்  யார்?  அதுவும் அரசியல்வாதிகள் தானே!

இந்த  அரசியல்வாதிகள் மட்டும் கொஞ்சமும் நம்ப முடியாத  ஓர் உயிரினம்! ஒவ்வொரு நிமிடமும் மாறிக்கொண்டே இருப்பார்கள்.  ஒவ்வொரு நிமிடமும் தங்களது அடையாளங்களை மாற்றிக்கொண்டே இருப்பவர்கள் தான் அரசியல்வாதிகள்! இவர்களை நம்பி எதனையும் செயல்படுத்த முடியாது!

இது போன்ற விஷயங்களில் நம் விருப்பத்திற்கு  ஏற்ப நம்மால் நடந்துகொள்ள முடியாது.  இதில் பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. வெளிநாடுகளுடனான  நட்புறுவு,  உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்புகள் என்று பல பிரச்சனைகள் இருக்கின்றன. உலகங்கிலும் எல்லா நாடுகளும் ஏதோ ஒரு வகையில் பொருளாதார ரீதியில்  பின்னிப்பிணைந்து  செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.  ஒன்றை நாம் தடை செய்தால்  அதன் விளைவுகளையும் நாம் சந்திக்க வேண்டும்.

மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.  அரசாங்கம் முடிவு செய்தால் பிரச்சனைகள் ஏற்படும்.  நான், நீங்கள், நம் மக்கள் அனைவரும் சேர்ந்து எது நல்லது எது கெட்டது என்று ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும்!

நீதி, நியாயம் வெற்றி பெற வேண்டும்!


No comments:

Post a Comment