Thursday 11 November 2021

வீரமங்கை மலாலா மணம் புரிந்தார்!

 

                                              Malala Yousafzai married to Asser Malik

மலாலா யார் என்று பெரும்பாலும் தெரிந்திருக்க வேண்டும். தாலிபான் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவர் - மன்னிக்க - சுட்டுக்கொல்லப் பட வேண்டியவர் - அந்தத் தூப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பித்திக் கொண்டவர்! பின்னர் படு காயங்களுடன் இங்கிலாந்து சென்று அங்குள்ள மருத்தவர்களால் காப்பாற்றப்பட்டவர். துப்பாக்கி சூடு நடந்த போது அவருக்கு வயது 15.

தாலிபான்கள் மாலாலாவைக் கொடூரமான முறையில் கொலை செய்ய முயற்சித்ததற்கான  காரணங்கள் என்ன? தனக்கும் தன்னைப் போன்ற பெண் பிள்ளைகளுக்கும் கல்வி வேண்டும் என்று அடம் பிடித்தது தான். பெண் கல்வி தாலிபான்கள் கொள்கைக்கு எதிரானது! பாக்கிஸ்தானின் ஒரு சில  எல்லைப் பகுதிகள் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. மலாலா வாழ்ந்த பகுதியும் அதில் அடங்கும். 

 மாலாலா உலகெங்கிலும் பல நாடுகளுக்குச் சென்று பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்கிற அவசியத்தை வலியுறுத்தியவர். ஐக்கிய நாடுகள் சபையில் பெண்கள் உரிமைக்காக குரல் கொடுத்தவர். அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டிருக்கின்றது. மிக இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற ஒரே நபர் இவர்தான். அப்போது அவருக்கு வயது 17. இன்றளவும் மனித உரிமைக்காகவும், பெண்கள், குழந்தைகளின் கல்வி என்று தொடர்ந்து  போராடிக் கொண்டிருப்பவர்.

இப்போது மலாலாவுக்கு வயது 24.  அவர் திருமணம் செய்து கொண்டவரின் பெயர் அசர் மாலேக். அவர் பாக்கிஸ்தானில் பெரும் புள்ளி, தொழிலதிபர் என்று சொல்லப்படுகிறது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர்  திருமணம் பற்றி அவரது கருத்து கொஞ்சம் கலக்கலாக இருந்தது! "ஏன் திருமணம்?  இருவருக்கும் பிடித்திருந்தால் சேர்ந்து வாழ வேண்டியது தானே!" என்றெல்லாம் பேட்டி கொடுத்திருந்தார். இப்போது அவரது கருத்தை அவர் மாற்றிக் கொண்டார் என்றே தெரிகிறது.

அவரது திருமணம் மிக எளிய முறையில், உறவினர்கள் புடைசூழ,  அவரது பெர்மிங்ஹாம் இல்லத்தில் நடந்தேறியது. கோரோனா காலக்கட்டத்தில் உலகளவில் புகழ்பெற்ற ஒரு வீர மங்கையின் திருமணம் இது.

நாமும் அவரை வாழ்த்துவோம்! அவரின் சிறப்பான இல்லற வாழ்க்கைக்காக இறைவனைப் பிரார்த்திப்போம்!

No comments:

Post a Comment