Sunday 14 November 2021

வாழ்த்துகள் தலைவரே!

                  ம.இ.கா. தேசியத்தலைவர்,  டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்

ம.இ.கா. தேசியத் தலைவர்  டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன்  அரசாங்கத்தால் தென் கிழக்காசியா நாடுகளுக்கான சிறப்புத் தூதராக நியமனம் செய்யப்பட்டிருப்பதை நாமும் மகழ்ச்சியோடு வரவேற்கிறோம். இந்தப் பதவி அமைச்சர் பதவிக்குச் சமமானதாகும்.

உண்மையைச் சொன்னால்  இந்தப் பதவி எப்போதோ கிடைத்திருக்க வேண்டிய பதவி. காரணம் பாஸ் கட்சியின் தலைவர்,  ஜனநாயக முற்போக்குக் கட்சியின் தலைவர் போன்றவர்களுக்குத் தூதரகப் பதவிகள் வழ ங்கப் பட்டிருக்கின்றன. என்ன காரணங்களுக்காக இவரது பதவி தள்ளிப் போடப்பட்டது என்பது தெரியவில்லை!  ஒரு வேளை தேர்தலை வைத்து கணக்குப் போடுகிறார்களோ?

இந்த நேரத்தில் இன்னொரு கணக்கையும் நாம் போட வேண்டியிருக்கிறது.

இந்த அமைச்சர் பதவி என்பது முற்றிலுமாக விக்னேஸ்வரன்  அவர்களுக்கு ஓர் இந்தியர் பிரதிநிதி  என்கிற வகையில் கொடுக்கப்பட்ட பதவி. அதனை அவர் மறவாமல் இருக்க வேண்டும்.

இந்தப் பதவியை வைத்து  மிகவும் தாழ்ந்து போயிருக்கும்  இந்தியர்களுக்கு  எந்த வகையில்  உதவி செய்ய முடியும் என்பதைப் பார்க்க வேண்டும். பொதுவாக  ம.இ.கா. ,வினர் இந்தியர் நலன் பற்றி கவலைப்படுவதில்லை!  "என் கடன் 'மணி' செய்து கிடப்பதே என்பதே அவர்களின் கொள்கை! அதனை இந்த நாடே அறியும்! இந்தியர் நலனை மறந்தால்  வருங்காலங்களில் நியமனப் பதவிகள் மட்டும் தான் அவர்களுக்குக் கிடைக்குமே தவிர இந்தியர்கள் அவர்களைப் புறக்கணித்து விடுவார்கள்! இந்தியர்கள் அவர்களைப் புறக்கணித்தால் அரசாங்கமும் அவர்களைப் புறக்கணித்துவிடும்!

விக்னேஸ்வரன் அவர்களுக்கு மட்டும் நாம் இதனைக் கூறவில்லை. ம,இ,கா, வில் உள்ள அனைத்துத்  தலைவர்களுக்கும்  இதனை நாம் கூறுகிறோம்.

கூறுவதற்கு ஒரே காரணம்: நானும் ஏற்கனவே ம.இ.கா.வில் இருந்தவன் தான். அதன் வலிமை என்னவென்பது எனக்குத் தெரியும்.

என்ன செய்வது? தவறானவர்கள் கையில் ம.இ.கா. போனதால் கடைசியில் அனைத்தும் தவறாகவே போய்விட்டது!

எப்படியிருப்பினும் வாழ்த்துகள் தலைவரே! நல்லதை எதிர்பார்க்கிறோம்! நன்றி!


No comments:

Post a Comment