Thursday 18 November 2021

நான்கு இலக்க சூதாட்டத்துக்குத் தடை!

 

                        கெடா மாநிலத்தில்  நான்கு இலக்க சூதாட்டத்திற்குத் தடை

கெடா மாநிலத்தில் நான்கு இலக்க சூதாட்டத்திற்குத் தடை விதித்தார் மாநில மந்திரி பெசார் முகமட் சனூசி நொர்!

சூதாட்டம் என்பதை பொதுவாக நாம் வெறுக்கிறோம். எந்த மதமும் சூதாட்டத்தை ஆதரிக்கவில்லை. 

எத்தனை மதங்கள் இருந்தும் என்ன பயன்?   "மறு உலக வாழ்க்கையில் கேள்வி கேட்கப்படுவேன்!" என்கிற பயம் அவர் ஒருவருக்குத் தான் இருப்பதாகத் தெரிகிறது! இது நாள்வரை கெடா மாநிலத்தை வழி நடத்தியவர்களுக்கு  அந்த பயம் ஏற்படவில்லை! 

ஆனால் இந்த ஒரு விஷயத்திற்காக அதாவது சூதாட்டத்தை ஒழித்ததற்காக இவர் மறு உலகில் நல்ல வாழ்க்கை அமையும் என்று நினைக்கிறாரா? நாம் அப்படி நினைக்கவில்லை. அப்படி முடியும்  என்றால் ஒவ்வொரு அரசியல்வாதியும் தனது கடைசி காலத்தில் இப்படி ஒர் சாதனையைப் படைத்துவிட்டு மிக எளிதாக மறு உலகிற்குள் புகுந்து நல்ல பெயர் வாங்கி விடுவார்கள்!

சனூசி எப்படி இதனைச் செய்தாரோ அதே போல இன்னும் பல நல்ல காரியங்களைச் செய்ய வேண்டி வரும். இப்போது செய்தது மிகவும் சாதாரண காரியம். இருக்கிற மற்ற இனத்தவரின் வழிபாட்டுத்தலங்கள் மீது கைவைக்கக் கூடாது! கோரோனா என்று சுகாதார அமைச்சு ஊரடங்கை விதித்தால்  அதற்குக் கட்டுப்பட வேண்டும். பக்கத்து மாநிலங்களோடு சண்டைக்குப் போகக் கூடாது! தனக்குக் கீழே அடியாள்களை வைத்துக் கொண்டு மிரட்டக் கூடாது! பினாங்கு மாநில முப்தி சொன்னது போல "கம்பத்துக்  கௌபாய்" போல நடந்து கொள்ளக் கூடாது! இதெல்லாம் அகம்பாவங்கள்! மட்டும் அல்ல!  மறு உலக நல்வாழ்விற்கு எதிரடையானவை! இந்தக் குறைபாடுகளை வைத்துக் கொண்டு மறு உலக வாழ்க்கைப் பற்றி பேசுவதே தவறு! இங்கு யாரும் உத்தமர் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்!

நான்கு இலக்க சூதாட்டத்தை ஒழித்துவிட்டார். அத்தோடு கதை முடிந்ததா? அப்படியெல்லாம் சொல்வதற்கில்லை. இனி கள்ளத்தனமாக நான்கு இலக்க விளையாட்டு தொடரவே செய்யும்! அதிகாரபூர்வமாக நான்கு இலக்க விற்பனை இருக்கும் போதே கள்ளத்தனமாகவும் அது எழுதப்பட்டு வருகிறது என்பதும் மறப்பதற்கில்லை!   இனி அது, குறிப்பாக கெடா மாநிலத்தில், இன்னும் அதிகமாக பயன்பாட்டுக்கு வரும் என நம்பலாம்!

இந்த நிலை வரும்போது என்னவாகும்? அரசாங்கத்திற்குக் கிடைக்க வேண்டிய வருமானம் போய்விடும்! இனி தனிப்பட்ட முறையில் வியாபாரம் செய்பவர்கள் கூடுவார்கள். அவர்களில் அதிக இலாபம் பெறுபவர்களும் இருப்பார்கள்! துணடை காணோம் துணியைக் காணோம் என்று ஓடிப்போகுபவர்களும் இருப்பார்கள்!

ஆக,  எப்படிப் பார்த்தாலும் இந்த சூதாட்டம் அவ்வளவு எளிதில் மறைய வழியில்லை! இன்னொரு அரசாங்கம் மாநிலத்திற்கு வரும் போது அதனை மீண்டும் கொண்டு வருவார்கள்! 

இதற்கெல்லாம் ஒரு முடிவு காண வேண்டுமென்றால் "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்  திருட்டை ஒழிக்க முடியாது!" என்று பட்டுக்கோட்டையார் பாடலைக் கேட்டு தலையில் அடித்துக் கொள்ள வேண்டியது தான்!

No comments:

Post a Comment