Sunday 7 November 2021

இது எப்படி சாத்தியம்?

 

                           வலைதளத்தில் இனவாதம் பேசிய வங்காளதேச ஆடவன்

இந்து சமயத்தை தாக்குவது, தீபாவளி கொண்டாட்டத்தை தாக்குவது - இது போன்ற தாக்குதல்களெல்லாம்  ஓர் இந்தியரும், இஸ்லாமிய  போதகருமான ஸாகிர் நாயக் என்று நாட்டிற்குள் காலடி எடுத்து வைத்தாரோ அன்றிலிருந்தே ஆரம்பாமாகி விட்டது. அவருக்கு அரசியல் அடைக்கலம் கொடுத்த நாடு இந்த நாடு. அவருக்குக் கொடுக்கப்பட்ட பணி பிற சமயங்களைத் தாக்கிப் பேசும் பணியாக இருக்கலாம்.

ஸாகிர் நாயக் இப்போது அமைதியாக இருப்பது போல் தோன்றினாலும் அவரது சீடர்கள் அவரது வேலையைச்  செய்து கொண்டிருக்கின்றனர். ஸம்ரி வினோத் என்னும் முன்னாள் இந்து மதத்துவர் அதில் முக்கியமானவர்.

இப்போது இந்த கூட்டத்தோடு மேலே படத்தில் காணப்படும் வாங்காளதேசி ஒருவனும்  சேர்ந்து கொண்டது நமக்கு வியப்புதான்! நாட்டிற்குள் வேலை தேடி வந்தவன்.  அந்நபரின் வேலை அனுமதி காலாவதியாகிவிட்டது. அனுமதிக்கப்பட்ட காலமும் காலாவதியாகிவிட்டது. தனது நாடு திரும்பவில்லை. ஒரு வேளை இந்துக்களைத் தாக்கிப் பேசினால் தனக்கு நாட்டில் தங்க அனுமதி கிடைக்கும் என்று கூட நினைத்திருக்கலாம்! எதுவும் சாத்தியம்!

எனினும் இப்போது அந்நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஜொகூர் மாநில காவல்படைத் தலைவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்! அந்நபர் ஜொகூரில் கைது செய்யப்பட்டிருப்பதால் நிச்சயமாக அதன் பலாபலனை அனுபவிக்க நேரிடும் என நம்பலாம்!

காரணம் ஏற்கனவே ஜொகூர் சுல்தான் இனங்களுக்கிடையே சமயத்தை வைத்து கலவரத்தை ஏற்படுத்த நினைப்பவர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார்.  அவரது எச்சரிக்கை உள்ளூர் சமயவாதிகளுக்கு மட்டும் அல்ல  வெளிநாட்டவருக்கும் பொருந்தும்.

சமயத்தை வைத்து பிழைப்பு நடத்தலாம். தவறில்லை. ஆனால் மற்ற சமயங்களைத் தாழ்த்தி தான் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பது கேடுகெட்ட பிழைப்பு.

சமயங்கள் நல்லதைப்  போதிக்கின்றன. நல்ல செய்திகள் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதில் யாரும் எதிர்ப்பைத் தெரிவிக்கப் போவதில்லை.

நம்முடைய கேள்வி எல்லாம் அது எப்படி ஒரு வெளிநாட்டுகாரனுக்கு இந்த அளவு பேசுவதற்கு துணிவு வருகிறது என்பது தான். இது போன்ற நபர்களை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்கப் போவதில்லை!

No comments:

Post a Comment