Thursday 10 February 2022

களம் இறங்கும் இளைய தலைமுறை!

 

                                    Syed Saddiq Abdul Rahman. yellow shirt, at the centre! 

ஜொகூர் சட்டமன்றத் தேர்தலுக்கு நாள் குறித்தாயிற்று. மார்ச் 12-ம் தேதி  தேர்தல் என  தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. இந்த மாதம் 26-ம் தேதி, அதாவது இன்னும் இரண்டு வாரங்களில், வேட்பு மனு தாக்கல் செய்யப்படும்.

இங்கு நாம் முக்கியமாக  பேசப்போவது முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்,  சையட் சாடிக்கின்  நாட்டிற்குப் புதிய அறிமுகமான மூடா கட்சி பற்றி தான்.

மற்ற கட்சிகளைப் பற்றி பேச ஒன்றுமில்லை. எல்லாமே நமக்கு ஏற்கனவே  அறிமுகமான கட்சிகள் தாம். போட்டியிடுபவர்களும் ஏறக்குறைய மக்களுக்கு  அறிமுகமானவர்கள்! எல்லாருமே ஏதோ ஒரு வகையில் திருட்டுத்தனம் பண்ணியவர்கள்!  கட்சி மாறி மொள்ளமாரித்தனம் பண்ணியவர்கள்! இவர்களுடைய அரசியல் எப்படி இருக்கும் என நம்மால் கணிக்க முடியும்.

இவையெல்லாம் நாம்  அறிந்திருக்கிறோம். புதிய கட்சிகள் ஆரம்பிக்கிறார்கள் என்றால் அவர்கள் எல்லாம் மூன்னாள் ஓடுகாலிகள்!

ஆனால் முன்னாள் அமைச்சர் சயட் சாடிக் இவர்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். அரசியலுக்குப் புது முகம். இளைஞர்.  எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம். நல்ல பண்பாடு உள்ளவர்.  மற்றவரை மதிக்கத் தெரிந்தவர்.  மலேசியர் அனைவரும் ஒரு குடும்பம் என்கிற மனப்பானமை உள்ளவர்.

கிழடு கட்டைகள் எல்லாம் மதவாதம் பேசுவதும், மொழியை வைத்து அரசியல் நடத்துவதும் நாம் பார்த்துவிட்டோம். இனி அது மாற வேண்டும். அது இளைஞர்கள் கையில் தான் உண்டு. அந்த வகையில் சையட் சாடிக் போன்ற இளைஞர் தலைவர்களுக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டும்.

பெரு வெள்ளத்தின் போது நமது இளைஞர்கள் பள்ளிவாசல்களைச் சுத்தம் செய்தார்கள். ஒரு பிரச்சனையும் இல்லை. மலாய் இளைஞர்கள் இந்து கோவிலைச் சுத்தம் செய்தார்கள். வாதம், விதண்டாவாதம் எல்லாம் நடந்தது! பத்துமலை கோவில் முன்னே  மலாய் பெண் ஒருவர் குழந்தையைப் பிரசவித்தார். இந்து பெண்கள் பிரசவம் பார்த்தார்கள்! அந்தப் பக்கமிருந்து வாதம், விதண்டாவாதம் எதனையும் காணோம்!

இளைஞர்கள் இதனைப் புரிந்து கொள்வார்கள். அதனால் தான் மலேசிய அரசியலுக்கு இளம் ரத்தம் தேவைப்படுகிறது.அந்த இளம் ரத்தத்தை நாம் ஊக்குவிக்க வேண்டும். அது மூடா கட்சியினரிடம் உண்டு.

நமக்கு, நம் இனத்திற்கு, நம் மொழிக்கு இடையூறு தருபவர்களை இனி நாம் ஆதரிக்கவே வேண்டாம். புதியவர்களை, புத்தம் புது இளைஞர்களை நாம் ஆதரிப்போம். நாம் அனைவரும் மலேசியர் என்கிறவர்களை வரவேற்போம்.

இந்த ஜொகூர் சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் மூடா இளைய தலைமுறையினரை ஆதரிப்போம்! வரவேற்போம்!

No comments:

Post a Comment