Saturday 5 February 2022

பூஸ்டர் தடூப்பூசி தேவை தான்!

 

பூஸ்டர் தடுப்பூசி பற்றியான தவறான செய்திகள் வந்து கொண்டே இருப்பதால் நாமும்  அது பற்றி எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகிறது!

தொடர்ந்து டாக்டர்கள் பூஸ்டர் தடுப்பூசி போடுங்கள் என்று சொல்லிக் கொண்டு வருகிறார்கள். இது அவசியம், அத்தியாவசியம்  என்று ஒரு பக்கம் டாக்டர்கள்.  இன்னொரு பக்கம் "அங்கே ஒருவன் செத்துப் போனான்! இங்கே ஒருவன் செத்துப் போனான்! அவனுக்குக் கை வலி, இவனுக்குக் கால் வலி! ஒருத்தன் சுய நினைவு இல்லாமல் இருக்கிறான்!" இப்படியே சொல்லிக் கொண்டே போனால்  டாக்டர்கள் என்ன தான் கத்தோ கத்து என்று கத்தினாலும் வியாதியை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது!

நல்ல வேளை முன்பு  கொரோனா வுக்கு ஊசி போட்டவர்களில் பாதி பேருக்கு மேல் தடுப்பூசி போட்டு விட்டார்கள் என்பது நல்ல செய்தி. நாம் தடுப்பூசி போடுவதைத் தள்ளிக்கொண்டே போனால்  பிறகு பணம் போட்டு ஊசி போட வேண்டி வரும் என்பதையும் ஒதுக்கிவிட முடியாது. அந்த நேரம் இன்னும் வரவில்லை. அது வரையில் நன்றி!

தடுப்பூசி போடுங்கள் என்பது வேலையற்ற வேலை என்கிற எண்ணம் நமக்கு ஏன் வந்தது என்பது தெரியவில்லை. உலக அளவில் உலக சுகாதார நிறுவனம் என்னன்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறதோ அதைத்தான் எல்லா நாடுகளும் பின்பற்றுகின்றன. அதுவே எளிதான வழி.

மேல் நாடுகளிலும் இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. அங்கும் நம்மைப் போன்ற மனிதர்கள் தான் கோவிட்-19 க்கு ஊசியே தேவை இல்லை என்று சொல்லி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்!

நாம் இப்போதும் சொல்ல வருவதெல்லாம்:  இது மட்டும் தான் கொரோனாவைத் தடுக்கும் என்று சொல்ல வரவில்லை.  இப்போதைக்கு இது தான் ஒரே வழி..   இதைவிட ஒரு சிறந்த வழி இருந்தால் அதைக் கடைப்பிடியுங்கள். அல்லது இயற்கை வைத்திய முறை இருந்தால் அதனைக் கடைப்பிடியுங்கள். எதுவும் தேவை இல்லை "என்  உடம்பின் மீது எனக்கு அக்கறை உண்டு!" என்று நினைத்தால் அதுவும் சரி தான்.

ஆனால் பலர் மருந்துகளை மட்டும் நம்பி இருப்பவர்கள். அவர்கள் ஏதாவது மருந்தை சாப்பிட்டால் தான் அல்லது ஊசி போட்டல் தான் உடம்பு குணமாகும் என்று நினைப்பவர்கள். அவர்கள் அதனைச் செய்யட்டும். அவர்களைக் குறை  சொல்லாதீர்கள். இது தான் வழி என்று நினைப்பவர்களை விட்டுவிடுங்கள்.   குறைகளைச்  சொல்லி மற்றவர்களை அதைரியப்படுத்தாதீர்கள். 

பூஸ்டர் தடுப்பூசி இன்றை நிலையில் தேவையான ஒன்று  நமக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அதனைப் போட்டுத்தான் ஆக வேண்டும். ஏதோ ஏதோ குறைகளைச் சொல்லி மக்களைப் பயமுறுத்தாதீர்கள்.  

இன்று தடுப்பூசியால் மரணம் அடைபவர்களைவிட அதன் பயத்தால் தான் மரணம் நேரிடுகிறது! அது தான் உண்மை. மேலும் தடுப்பூசி போடுபவர்களில் பலர் வேறு பல நோய்களினாலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் தான். அதனால் தடுப்பூசி தான் அவர்களைக் கொன்றது என்று பீதியைக் கிளப்ப வேண்டாம்!

அதனால் தடுப்பூசி போடுவதில் தயக்கம் காட்ட வேண்டாம்! ஆனால் முழு மனதோடு அதனைச் செய்யுங்கள்!



No comments:

Post a Comment