Friday 25 February 2022

பிள்ளைகளுக்கான தடுப்பூசி!

 

                                                vaccination for school children

பிள்ளைகளுக்கான தடுப்பூசி இம்மாத ஆரம்பத்தில் தொடங்கப்பட்டுவிட்டது. 

சுகாதார அமைச்சின் அறிவிப்பின்படி இதுவரை மக்கள் நல்ல ஒத்துழப்பைக் கொடுக்கின்றனர். சுமார் 20 விழுக்காடு குழந்தைகள் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இப்போது சுகாதார அமைச்சு எல்லா மாநிலங்களிலும்  ஆங்காங்கே தடுப்பூசி மையங்களைத் திறந்து கொண்டிருக்கின்றனர்.  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அருகாமையில் உள்ள மையங்களுக்குச் சென்று  தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள  எல்லா வசதிகளையும்  சுகாதார அமைச்சு செய்து கொண்டிருக்கிறது.

சிறு குழந்தைகள் என்னும் போது பெற்றோர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கத் தான் செய்வர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பயமுறுத்தாமல் அவர்கள் சகஜ நிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவர்களின் பொறுப்பு.

ஊசி போட குழந்தைகளை, உள்ளே எப்படி இருந்தாலும்,  வெளியே மகிழ்ச்சியோடு அழைத்துச் செல்ல வேண்டும். ஆரம்ப காலத்தில் ஒருசில குளறுபடிகள் இருக்கத்தான் செய்யும். நல்லதையே சொல்லி குழந்தைகளை மையங்களுக்கு அழைத்து செல்லுங்கள்.  நீங்களும் பயந்து அவர்களையும் பயமுறுத்தி  வேண்டாத வேலைகள் எல்லாம் வேண்டாம்.

இப்போது உள்ள சூழலில் பெற்றோர்களுக்குப் பலவிதமான பிரச்சனைகளை எதிர்நோக்குவர் என்பது நமக்குப் புரிகிறது. எல்லாருக்குமே டென்ஷன். குழந்தைகளுக்கும் டென்ஷன் தான். ஆனாலும் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு நமது வேலைகளை நாம் பார்க்க வேண்டியுள்ளது என்பது தான் நிதர்சனம்.

என்னன்னவோ பிரச்சனைகள் இருக்கும் போது மேலும் ஒரு குழந்தைகளின் பிரச்சனையா என்று பெற்றோர்கள் நினைக்காமல் இருக்க முடியாது. ஆனாலும் நம்மால் என்ன செய்ய முடியும்? குழந்தைகளுக்குத் தடுப்பூசி என்பது கட்டாயம். இது உலகெங்கிலும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு தான். குழந்தைகளுக்குத் தடுப்பூசி  கட்டாயம் என்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது. அதைத்தான் நமது நாடும் செய்கிறது.

அதனால்,  ஏன் தடுப்பூசி என்று விதண்டாவாதம் செய்து கொண்டிருப்பதை விட்டுவிட்டு இன்றைய நிலையில் அது தவிர்க்க முடியாதது  என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். சில குழந்தைகள் தடுப்பூசி போடுவதும் சிலர் போடாததும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

அனைவரும் தடுப்பூசி போடுவோம்! வளமாக வாழ்வோம்!

No comments:

Post a Comment