Thursday 7 October 2021

மித்ராவுக்கு என்ன நேர்ந்தது?

    
 "செடிக்"  என்றாலும்  சரி "மித்ரா" என்றாலும் சரி;  அந்தக்காலம் தொட்டு
 இந்தக் காலம் வரை பலவாறான குற்றச்சாட்டுகள்,  பணம் கையாடல்கள் என்று  தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது!

நம்மாலும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை! தலைவர்கள் அடித்துக் கொள்கிறார்கள், ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகிறார்கள்! அது அவர்களுக்குள்ளே உள்ள ரகசியம். என்ன தான் குற்றம் சொன்னாலும் அவர்களிடமிருந்து உண்மை எதுவும் வரப்போவதில்லை!

இப்போதும் நம்மிடம் உள்ள கேள்வி செடிக் எந்த அளவுக்கு இந்தியர்களின் பொருளாதாரத்தை உயர்த்தியது? அப்படியெல்லாம் ஒரு மண்ணுமில்லை என்பது தான் மக்களின் மனநிலை! அப்போதே நாம் பலவாறாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். காற்பந்து குழுக்களுக்கும் உதவியிருக்கிறார்கள்! வெளிநாடு செல்ல புனிதயாத்திரைகளுக்கும்  உதவியிருக்கிறார்கள்! நாம் அதனைத் தவறு என்று சொல்லலாம். ஆனால் இந்தியர்களின் பொருளாதார முன்னேற்றம் என்று வரும்போது இவைகள் எல்லாம்  உள்ளடக்கியது தான் செடிக். அதனால் குற்றம் சொல்ல ஒன்றுமில்லை.

அதே நேரத்தில் ஒரு சில வர்த்தகர்களும் பயன் அடைந்திருக்கிறார்கள். கீழ்தட்டு வர்த்தகர்களை விட மேல்தட்டு வர்த்தகர்கள் அதிகமாகப் பயன் அடைந்திருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவெனில் பொருளாதார உதவி கேட்டு மிகச் சிலரே  மனு செய்ததினால்  மீதிப் பணத்தை ம.இ.கா.வினர்   பிரதமருக்கே தானம் செய்துவிட்டதாக  அப்போதே பேசப்பட்டது!

சரி! மித்ராவின் நிலை என்ன? இவர்களும் அவர்கள் செய்தது போலத் தான் செய்திருக்கிறார்கள். அதிக மாற்றமில்லை. ஆனால் அப்போது பொறுப்பிலிருந்த பி.வேதமூர்த்தி இப்போது என்ன சொல்ல வருகிறார் என்றால் "நாங்கள் முடிந்தவரை  எல்லாத் தரப்பு இந்தியர்களுக்கும்  உதவிகள் செய்திருக்கிறோம். நாங்கள் செய்த பண உதவிக்கான அனைத்துக்கும் கணக்குகள் உண்டு.

அடுத்து அவர் சொல்வது தான் கவனிக்கத்தக்கது. "அப்படி நான் ஏதேனும் தவறு செய்ததாக யாரேனும் நினைத்தால் என் மீது தாராளமாக ஊழல் தடுப்பு ஆணையம் அல்லது போலிஸில்  புகார் செய்யலாம்" 

ஆனால் ம.இ.கா. வினர் இப்படி எல்லாம் கூறுவார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியுமா?

அது சரி! மித்ராவின் இன்றைய நிலை என்ன? ஒன்னும் சரியில்லை! இப்போது இந்த நிதி ஒருமைப்பாடு அமைச்சின் கீழ் மாற்றப்பட்டு சும்மா கிணற்றில் விழுந்த கல் போல அப்படியே கிடக்கிறது! என்ன இந்தியர்களுக்கா? என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்!

No comments:

Post a Comment