Sunday 10 October 2021

நாளை முதல்...............!

 

நமது பிரதமரின் அறிவிப்பு கேட்பதற்கு இனிப்பான செய்தியாக இருந்தாலும் எதற்கும் அவசரப்படாதீர்கள் என்பதே நமது வேண்டுகோள்.

நாளை முதல் (11.10.2021)  மாநிலங்களிடையேயான  போக்குவரத்துகள் பழைய சகஜ நிலைக்குத் திரும்புவதால் வெளியூர்களில் உள்ள குடும்பத்தாரைப் பார்க்க எந்தத் தடையுமில்லை என்பதாக பிரதமர் அறிவித்திருக்கிறார்.

நல்ல செய்தி என்பதில் ஐயமில்லை. ஆனால் ஒன்று சொல்வேன்: அவசரப்படாதீர்கள்! மிகவும் முக்கியம் என்றால் மட்டுமே பயணங்களை மேற்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் பயணத்தை  தள்ளிப் போடுங்கள். இன்னும் கோவிட்-19 முற்றிலுமாக கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என்பதை மறந்து விடாதீர்கள். இன்னும் தொற்று தொடர்கிறது. மரணங்கள் இன்னும் நேர்கின்றன.  ஆபத்துகள் இன்னும் குறையவில்லை. அதனை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

வெளி ஊர்களுக்குப் பயணம் செய்யும் போது தடூப்பூசி போட்டவர்கள் மட்டும் தானா போகிறார்கள்? குழந்தைகள், பள்ளி செல்லும் பிள்ளைகள் அனைவருமே குடும்பத்தோடு பயணம் செய்யக்கூடிய வாய்ப்புகள் நிறையவே உண்டு. சில நாள்களுக்கு முன்னர் லங்காவியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஒரு குடும்பத்தில் மூன்று வயது குழந்தைக்கு கோரோனா பாதிப்பு ஏற்பட்டதாக செய்திகளைப் படித்தோம். ஆக, யாருக்கு, எந்த வயதினருக்கு என்ன ஆகும் என்பதையெல்லாம் நம்மால் கணித்துச் சொல்ல முடியாது. அப்படி ஒரு நிலைமையில் நாம் இருக்கிறோம்.

இது போன்ற காலக் கட்டத்தில் பயணங்களைத் தவிருங்கள் என்பது தான் சுகாதார அமைச்சின் அறிவுறை. தேவை, அவசியம் என்றால் மட்டுமே பயணம் செய்யுங்கள்.

ஆனால் என்ன தான் சொன்னாலும் இந்த மக்கள் கேட்பவர்களாகத் தெரியவில்லை! பழையபடி போக்குவரத்துகள் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டன! பழைய நிலைக்குத் திரும்பிவிட்டன என்று தாராளமாகச் சொல்லலாம்! எங்கும் நெருக்கடி!

பழைய நிலைக்கு நாடு மீள வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடுகள் இல்லை. ஆனால் அபாயம் இன்னும் இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 90% விழுக்காடு மக்கள் தடுப்பூசி போட்டிருக்கின்றனர். இன்னும் பத்து விழுக்காடு மக்கள் மூலம் தொற்று பரவலாம்! சாத்தியம் உண்டு.

முடிந்தவரை நோய் பரவலுக்கு நாம் காரணமாக இருக்கக் கூடாது! அதை மனதில் வைத்து செயல்படுங்கள்!

No comments:

Post a Comment