Saturday 1 June 2024

பத்துமலையில் சிறப்பு வழிபாடு!

 

பத்துமலையில் அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினர் இந்து பெருமக்கள்.

மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த சுற்றுப்பயணியான நபர் ஒருவர்  பத்துமலைத் திருத்தலத்தில், முருகன் சிலை அருகே,   திருக்குரான் வாசகங்களை  வாசித்து  அதனைத் தனது காணொளி, டிக்டாக்  தளங்களில் பதிவேற்றம் செய்திருந்திருந்தார். 

இதனை அறிந்த பக்தர்கள் பலர் அதிருப்தி அடைந்ததுடன் எதிர்ப்பையும் தெரிவித்தனர். அந்நபர் அதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.  அவரின் கூற்றுப்படி பத்துமலை திருத்தலம் என்பது ஒரு வரலாற்றுப் பூர்வ இடம் என நம்பியதால்,   தான் அங்கு திருக்குரான் வசனங்களை வாசித்ததாக அவர் கூறினார்.  அதற்காக அவர் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

திருக்குரான் வசனங்களை வாசித்ததற்காக அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும்  நோக்கத்துடன்  இந்து பெருமக்கள் சுமார் 600-க்கும் மேற்பட்டவர்கள் அமைதியுடன் ஒன்று கூடினர்.  இந்நிகழ்ச்சியில் ஒன்று கூடி தேவாரப்பாடல்களைப் பாடினர்.  சஹானா சுப்ரமணியம் தேவாரப்பாடல்களுக்குத்  தலைமை தாங்கி வழி நடத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பலர் வெளி மாநிலங்களிலிருந்தும், சிங்கப்பூரிலிருந்தும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி அமைதியுடன் நடந்தேறியது.

  பொதுவாக எந்தவொரு வழிபாட்டுத்  தலமாக இருந்தாலும் அதனை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.  மரியாதை தர வேண்டும்.  இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும். 

இந்து பெருமக்கள் அமைதியுடனும் எந்தவித ஆரவாரமும் இல்லாமல்  அமைதியுடன்  நடத்திய  இந்த  அமைதிப் பேரணியை வாழ்த்துகிறோம்.

No comments:

Post a Comment