Tuesday 18 June 2024

அது என்ன தமிழ்காரரா?

 

சில சமயங்களில் சில வார்த்தைகள் நம்மைப் புண்படுத்துகின்றன. சிலர் வேண்டுமென்றே அப்படி ஒரு வார்த்தையைப்  பயன்படுத்துகின்றனர். சினிமாவில் அந்தச் சொல்லை, தமிழர்களைக் கொச்சைப் படுத்தும் விதத்தில்,  கேவலப்படுத்துகின்றனர்.  அதனை அறியாமல் தமிழர்கள் நாமும் பயன்படுத்துகின்றோம்.

இன்றைய தமிழ் சினிமாவிள் பல வார்த்தைகள்   நம்மைக் கேவலப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கின்றன. அதனைத் தமிழர்கள் புரிந்து கொள்ளாமல் அவர்களும் அது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர்.

 "நீங்கள் தமிழ்காரரா?"  என்றால் என்ன பொருள்?  நீங்கள் தமிழரா"  என்று கேட்பதில் என்ன பிரச்சனை? தெலுங்கர்களைத் தெலுங்கர் என்கிறோம். மலையாளிகளை மலையாளிகள்  என்கிறோம்.   தமிழர்களை மட்டும் ஏன் தமிழர்கள் என்று அழைக்காமல் ;'தமிழ்காரரா'  என்று அழைப்பது ஏன்?  தமிழ் நாட்டில் திராவிடக் கூட்டம் தமிழன் என்று சொல்லுவதையே வெறுக்கிறது.   அதனை அவர்கள்  சினிமாவிலும்  சாமர்த்தியமாக புகுத்திவிட்டார்கள்.  இங்கும் நம்மில் பலர் 'தமிழ்காரர் என்கிற சொல்லை அறியாமல் பயன்படுத்துகிறோம்.

தமிழர்களின் அடையாளங்களை அழிப்பதில் திராவிடம் தொடர்ந்து முயற்சி  செய்து கொண்டிருக்கிறது.  தமிழ் நாட்டில் அரசு பள்ளிகளை 'கார்ப்பரேஷன் பள்ளி'  என்று  சொல்லி  சிறுமைப்படுத்துகிறது. அதாவது தமிழ் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்கான  சூழ்ச்சி இது.  தமிழையே ஒழிப்பதற்கான முயற்சி இது. ஆனாலும் அவர்கள் தான் வெற்றி பெறுகிறார்கள.   நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்க முடிகிறது.

உறவுகளே!  தமிழ், தமிழர் என்பது தான் நமது அடையாளம்.  தமிழ் என்று சொல்லுங்கள், தமிழர் என்று சொல்லுங்கள், தமிழ் நாடு என்று சொல்லுங்கள்.  நமது அடையாளங்களைச்  சிறுமைப்படுத்தும்  வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள்.

திராவிடம் என்பது நமக்கல்ல.  திராவிடம் என்பதைத்  தெலுங்கர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, மலையாளிகள் ஏற்றுக் கொள்ளவில்லை,  கன்னடர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை  அப்படியிருக்க  நமக்கும் திராவிடம் என்பதற்கும்  எந்த சம்பந்தமுமில்லை.  அதுபற்றி அதிகம் யோசிக்க வேண்டாம்.  அது  நமக்கான சொல அல்ல. அவ்வளவு தான். அதனை நாம் நம் தோளில்  சுமக்க வேண்டாம்.

அதேபோல தமிழ்காரர், தமிழ்காரரா?,  தமிழ்காரர்கள் - இவைகளெல்லாம் நமக்கு வேண்டாம். நாம் தமிழர்.  இந்த அடையாளம் போதும்

No comments:

Post a Comment