Tuesday 11 June 2024

வர்த்தகர்களுக்கு வாழ்த்துகள்!!

     51 இந்திய வர்த்தகர்கள்  25,00,000  இலட்சம் வெள்ளி கடனுதவி பெற்றனர்.

இந்திய வர்த்தகர்களுக்கு நமது வாழ்த்துகள். அவர்கள் அனைவரும் தெக்கூன்  SPUMI Goes Big  திட்டத்தின் கீழ் சுமார் 25 இலட்சம் வெள்ளி கடன் உதவி பெற்றிருக்கின்றனர்.  வருங்காலங்களில் இந்நாட்டின்  இந்திய   கோடிஸ்வரர்கள்  என்று பெயர் எடுக்க வேண்டுமென மனமார வாழ்த்துகிறேன்.

இவர்கள் எல்லாம் புதிதாக தெக்கூன் மூலம் உதவி பெற்றவர்கள் என்று சொல்ல முடியாது. ஏற்கனவே இவர்களில் பலர் கடன் பெற்றவர்கள் தான். கடன் பெற்று அதனைச் சரியாக கட்டிமுடித்து  மீண்டும் கடன் பெறுகிறார்கள்.  இவர்கள் அனைவரையும்  பொது வெளியில் கொண்டுவந்து மக்களுக்கு அறிமுகப்படுத்திய மாண்புமிகு அமைச்சர் டத்தோ ரமணன் அவர்களைப் பாராட்டுகிறோம்.

பொதுவாகவே இது போன்ற செய்திகள் பொது மக்களுக்குப் போய்ச் சேருவதில்லை என்கிற ஆதங்கம் நமக்கும் உண்டு.  ஆனால் இப்போது டத்தோ ரமணன் அவர்கள் தவறாமல் செய்திகளை வெளியே கொண்டு வந்துவிடுகிறார்.  வெளியே கொண்டு வரும் போது தான் மக்களுக்கும் நம் மக்கள் தொழில் செய்ய உதவிகள் கிடைக்கின்றன  என்று தெரிய வரும்.

இது போன்ற உதவிகள் கிடைக்கின்ற போதுதான் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கை வரும்.  நமக்குக் கிடைக்க வேண்டிய பங்கு எப்போதும்  இருந்து கொண்டு தான் இருக்கின்றது.  அதனை யாரும் பறித்து விடுவதில்லை.  ஆனால் நாம் வெவ்வேறு காரணங்கள் சொல்லி  அதனைத் தவிர்த்து விடுகிறோம்.

முதல் காரணமே "அங்கு மலாய்காரர்கள் லோன் கிடைக்காது" என்கிற கருத்து திணிக்கப்படுகிறது.  உண்மை தான் அது ஒரு நேரம்.   அப்போது அப்படி. இப்போது எல்லாம் மாறியிருக்கிறது.  ஏன்? அப்போது  எனக்கும்  கூட  கிடைக்கவில்லை.  இப்போது எனது மகனுக்குக் கிடைக்கிறதே!

நம்முடைய அறிவுரை எல்லாம் சிறிய கடன்களை நாம்  தவறாமல் கட்டி வந்தால் அடுத்து பெரிய கடன்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. அப்படித்தான் பலர் பெரிய கடன்களாக எடுக்கின்றனர். கடன் என்று வந்துவிட்டால் அனைத்து நிறுவனங்களும் ஒரே மாதிரி தான் இயங்கும்.  அது வங்கியாக இருந்தாலும் வேறு நிறுவனமாக இருந்தாலும் ஒரே ஒரு  கொள்கையைத்தான் கொண்டுள்ளன. மாதாமாதம் தவனைகளைத் தவறாமல் கட்ட வேண்டும்.  அதில் சீனர்கள் முதல் இடத்தில் இருக்கின்றனர்.

நமது எதிர்காலமே நமக்கு முக்கியம்.  அந்த எதிர்காலம் வர்த்தகத்தில் தான் உள்ளது. அதுவே நமது இலட்சியமாக இருக்க வேண்டும். வாழ்த்துகள்!

No comments:

Post a Comment