Thursday 20 June 2024

வாசிப்பை நேசிப்போம்!

 
வாசிப்பை நேசிப்போம்  என்று சொன்னால் சும்மா 'வாசி! நேசி!'  என்று கதை அளக்கிறான்  என்று அலட்சியப் படுத்த வேண்டாம்!

வாசிப்பது என்பதை  அவ்வளவு அலட்சியமாக விட்டுவிட முடியாது.  இன்று நமது பிரச்சனை எல்லாம் அல்லது தமிழர்களின் பிரச்சனை எல்லாம் எதையும் தெரிந்து கொள்ளாமல் அலட்சியமாக இருப்பதால்  நாம் பல வழிகளில் சீரழிக்கப்படுகிறோம்.  ஏமாற்றப்படுகிறோம்.  ஏன்? நாம் தலைவன் என்று நம்புவனே நம்மை ஏமாற்றுகிறான்!  காரணம்  நமக்கு வெளி உலகம் தெரியவில்லை.

நமது பெண்கள் இன்று பலவழிகளில் ஏமாற்றப்படுகிறார்கள்.  காரணம் என்ன?  குறைந்தபட்சம்  தினசரி  செய்திகளைக் கூட தெரிந்து கொள்வதில்லை.  உலகம் தெரியாதவர்களாக  இருக்கின்றனர்.  அதனால் மிக எளிதில் ஏமாறுகின்றனர்.  அப்புறம் டிக்டாக்கில் சண்டை! 

இந்த உலகத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டுமானால்  படிக்க வேண்டும். புத்தகங்கள் படிக்க வேண்டும். நாளிதழ்கள் படிக்க வேண்டும். உங்களுக்குத் தெரிந்த மொழியில் எதை வேண்டுமானாலும் வாசிக்கலாம்.

நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாவிட்டால் நம் பக்கத்து வீட்டுக்காரனும் ஏமாற்றுவான்! தெரிந்து கொள்ளுங்கள்.  பெண்கள் இன்று பலவழிகளில் ஏமாற்றப்படுகின்றனர்.  இன்று நம் குடும்பங்களில் அமைதி இல்லை, குடும்ப சச்சரவுகள், சண்டை,  குடுமபப் பிரிவினைகள், குடிகாரக் குடும்பங்கள் - இப்படி ஏகப்பட்ட தொல்லைகளை நாம் பார்க்கிறோம்.  இதற்கெல்லாம் காரணம் என்ன?

புத்தகங்களைப் படிப்பதால், நாளிதழ்களைப்படிப்பதால் இவைகள் எல்லாம்  தீர்ந்துவிடுமா?  தீர்ந்துவிடும்! உண்மை தான். பிரச்சனைகள் வராதவாறு  அவைகளைத் தடுத்துவிடும்.  நம்மை நெறிபடுத்தும். எழுத்தாளன் சும்மா எதனையோ எழுதிவிட்டுப் போகவில்லை. அவன் நம்மை நெறிபடுத்துவதோடு, வாழ்க்கையைச் செம்மையாக வாழ வழிகாட்டுகிறான். வாழ்க்கை அனுபவங்களை நமக்குக் கொடுத்துவிட்டுப் போகிறான். 

வாசிப்பது என்பது வீண் செலவு என நினைக்காதீர்கள்.  அதனை ஒரு முதலீடாக  நினையுங்கள்.  வாசிப்பதை வருங்கால  தலைமுறையினருக்கும்  அறிமுகம் செய்யுங்கள்.  அது எல்லா காலங்களுக்கும்  பயன் தரும்.

No comments:

Post a Comment