Sunday 9 June 2024

இது என்ன நியாயம்?


 உணவுகளை  வீணடிப்பதில் மலேசியர்களின் இணை யாருமே இல்லை! அதுவும் குறிப்பாக  திருமண விருந்துகளில்  சொல்லவே வேண்டாம்! அதனை ஒரு மகிழ்ச்சியான விஷயமாகவே கருதுகின்றனர்.

அது பற்றி நாம் இங்கே பேசப்போவதில்லை.  உணவுகள் கெட்டுப் போவதற்கு முன்பே  அதனை  முடித்துவிட வேண்டும்  என்பது தாய்மார்களுக்குத் தெரிந்த விஷயம்.

ஆனால் உணவகங்களுக்கு அது தெரியவில்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது. சமீபத்தில் ஒரு பெண்மணி அது பற்றி விளக்கியிருந்தார். மிகவும் வருத்தமான விஷயம்.  உணவகம் ஒன்றில் உணவை வாங்கிவந்து வீட்டில் சாப்பிட உட்கார்ந்தபோது அதிர்ச்சி அடைந்தார்.  காரணம் சமைக்கப்பட்ட சோறு கெட்டுப்போய் இருந்ததாக அவர் கூறுகிறார். சோற்றை வாயில் வைக்க முடியாத அளவுக்கு அது கெட்டுப் போயிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

விலைவாசி ஏறிவிட்டதால்தான்  அனைத்து விலைகளையும் ஏற்றிவிட்டார்கள்.  விலைகளை ஏற்றிவிட்ட பிறகு அவர்களுக்கு என்ன பிரச்சனை?  சரியான முறையில் வாடிக்கையாளர்களுக்கு உணவு அளிப்பது அவர்களின் கடமை.  உணவகத்திலேயே சாப்பிடும் போது சரியாகவே நடந்து கொள்கிறார்கள்.  ஆனால் அதனையே பேக்கெட் செய்யும் போது  விளையாடிவிடுகிறார்கள்!

சமீபத்தில் எனக்கும் அது போன்ற ஒரு  சம்பவம்  நடந்தது. மிகவும் பிரபலமான ஓரு பேரங்காடியில், அங்குள்ள  உணவகத்தில் என் வீட்டார்  மீகூன் கோரிங் வாங்கி வந்திருந்தார்கள்.  மீகூனை அவித்துப் போட்டிருந்தார்கள். கோரிங் செய்யவில்லை. அதில் மிகக்குறைவான சில்லி சாஸ் ஊற்றியிருந்தார்கள்!  சாப்பிட ஒன்றுமே இல்லை!  அதற்கு எவ்வளவு பணம் வாங்கினார்கள்  என்பது என் வீட்டாருக்குத் தெரியவில்லை!  வரவர இந்திய உணவகங்கள் மிக மோசமாக நடந்து கொள்கின்றன.

விலைகள் ஏறிவிட்டன என்று தெரிந்தும் மக்கள் சாப்பிடுகிறார்கள். விலையையும் ஏற்றிவிட்டு இப்படியெல்லாம் மோசடி செய்கின்றனர். இவர்களை எப்படி நாம் புரிந்து கொள்வது?   நமக்குத் தெரிந்தது ஒரு வழி தான். நன்கு அறிமுகமானவர் உணவகங்கள் என்றால் பேக்கெட் செய்யுங்கள்.  அறிமுகமில்லாதவர்களிடம் பேக்கெட் செய்யாதீர்கள் என்பது தான்.

உணவகங்களுக்குச் சீக்கிரம் ஆப்பு வைக்கும் காலம் வரும்!

No comments:

Post a Comment