நாட்டின் மற்ற பகுதிகளில் இல்லாத ஒன்று புத்ராஜயாவில் இருக்கிறது என்றால் அது நிச்சயமாக ஆராயப்பட வேண்டிய விஷயம்.
ஒரு பக்கம் அங்கு வாழும் மக்கள் பருமனாக இருப்பதாகக் கூறப்படும் வேளையில் புத்ராஜயாவில் வேலை செய்பவர்களும் பருமனாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அரசாங்கத் தலைமை செயலாளர், அரசாங்கப் பணிகளில் ஈடுபட்டவர்களில் 50 விழுக்காட்டினர் பருமனாக இருப்பதாகக் கவலைத் தெரிவித்திருக்கிறார்.
ஒருசெய்தியின்படி ஆசிய நாடுகளில் மலேசியர்களே அதிகப் பருமனாக இருக்கின்றனர் என்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அது ஆசியாவின் புள்ளிவிபரம். அப்படி ஆசியா இல்லையென்றாலும் ஆசியன் நாடுகளில் மலேசியா தான் பருமனில் முதல் இடத்தைப் பிடித்து வைத்திருக்கிறது என்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
நமக்குத் தெரிய வேண்டியது எல்லாம் மலேசியாவில் அது ஏன், அந்த மண் மட்டும் பருமனைப் பதிவு செய்வதற்கு என்ன காரணமாக இருக்கும் எனக் கேள்வி எழுகிறது.
ஒரு காலத்தில் புத்ராஜயா தோட்டப்புறமாக இருந்த இடம். அப்போது, அங்கு வாழ்ந்தவர்கள் இப்படித்தான் புருமனாக இருந்தனரா எனகிற விபரம் நம்மிடம் இல்லை. அப்படி இருக்க நியாயமில்லை தான். ஆனால் இந்தப் புதிய குடியேறிகளுக்கும் பருமனுக்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்கின்றனவா என்பதும் புரியாத புதிராகத்தான் இருக்கின்றது!
எப்படியோ, அமைச்சர் அரசாங்க ஊழியர்கள் தங்களது உடம்பை திடகாத்திரமாக வைத்துக்கொள்ள பலவேறு பயிற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று ஆலோசனைகளைக் கூறியிருக்கிறார். கார்களைப் பயன்படுத்தாமல் அலுவலகங்களுக்கு நடந்தே வரலாம் அல்லது சைக்கிள்களில் வரலாம். எத்தனையோ வழிகள் உண்டு.
ஆனால் சோம்பேறித்தனம் இருந்துவிட்டால் எதுவும் ஆகாது. வீட்டுக்கும் தெண்டம் நாட்டுக்கும் தெண்டம்! கொஞ்சம் முயற்சி செய்தி வாழ வேண்டிய வயதில் வாழ்ந்து தான் பாருங்களேன்!
No comments:
Post a Comment