நாம் வாங்குகின்ற பொருள்கள் அல்லது வேறு எதுவானாலும் முடிந்தவரை நமது இந்தியர்கள் செய்கின்ற வியாபார நிலையங்களிலேயே வாங்குங்கள் என்பது தான் நமது கோரிக்கை ஏன் நமது கடமையாகவும் இருக்க வேண்டும்.
சமீபத்திய புள்ளிவிபரத்தின் படி சீனர்கள் 95 விழுக்காடு சீனர்களை நம்புகின்றனர். இந்தியர்கள் 85 விழுக்காட்டினர் இந்தியர்களை நம்புகின்றனர். மலாய்க்காரர்கள் இன்னும் கீழே: சுமார் 75 விழுக்காட்டினரே மலாய்க்காரர்களை நம்புகின்றனர்.
இதன் மூலம் நாம் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்? சீனர்கள் சீனர்களை நம்புவதால் அவர்களின் வியாபாரங்கள் அனைத்தும் சீனர்களுக்கு மட்டுமே என்கிற நிலைமையில் அவர்களின் பொருளாதாரம் உயர்ந்து நிற்கிறது. அவர்களின் கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் சீனர்களுடன் மட்டுமே என்பதால் சீனர்களை யாராலும் வீழ்த்துவதற்கு வாய்ப்பில்லை. அதனால் தான் இந்நாள் வரை சீனர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்து நிற்கின்றனர்.
நம்முடைய நிலைமை எப்படி இருக்கிறது? நாம் நம்மையே நம்புவதில்லை. யாரையும் நம்புவதில்லை. அதோடு அது போவதில்லை. பொறாமைப் படுகிறோம். நம்ம ஆள் ஒருவன் நல்லா இருந்தால் அது இந்த சமுதாயத்திற்கு நல்லது தானே என்கிற எண்ணம் நம்மிடம் இல்லை. நாளை நமக்கு ஒரு பிரச்சனை என்னும் போது நம்ம ஆள் தான் நமக்கு உதவுவான். அப்படி ஒரு எண்ணம் கூட நமக்கு வருவதில்லை. இந்தியர்கள் எத்தனையோ பேர் மளிகைக்கடைகள் வைத்திருக்கிறார்கள். செட்டியார்கள், தமிழ் முஸ்லிம்கள் ஆகியவர்கள் முக்கியமானவர்கள். மற்ற துறைகளிலும் பலர் இருக்கின்றனர்.
நாம் நமது குடும்ப சண்டைகளை வீதிக்குக் கொண்டு வரக்கூடாது. இந்தியன் ஒருவனைத் தோற்கடித்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டக்கூடாது. நமக்கு ஒருவனைப் பிடிக்காவிட்டாலும் ஒரு இந்தியனிடமே வாங்குங்கள். நம்ம ஆள் ஒருவன் பிழைத்துவிட்டுப் போகட்டும். விலையுள்ள கார் வாங்கினால் ஒரு இந்திய விற்பானையாளனிடமே வாங்குங்கள். அவன் பிழைக்கட்டுமே அதை ஏன் கெடுக்க வேண்டும்?
நம் பொருளாதாரம் நம் கையில் நிற்க, இந்தியர்களின் பொருளாதாரம் உயர, நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம்முடைய ஆள்களிடம் தேடியாகப் போய் தேடிப்போய் அவர்களிடம் வாங்குங்கள். அதனையே ஒரு பழக்கமாகக் கொள்ளுங்கள். நம்முடைய தாமான்களில் சுப்பர் மார்கெட் இருக்கிறது, சீனர் கடை இருக்கிறது, மலாய்காரர் கடை இருக்கிறது அங்கே ஓர் இந்தியர் கடையும் இருக்கிறது. அவரின் கடை தான் நம்முடைய தேர்வு. அதில் மாற்றமில்லை.
No comments:
Post a Comment