சமீபகாலமாக மலேசியரிடையே இந்த அளவுக்குக் கெட்ட பெயர் வாங்கிய ஒரு நிறுவனம் என்றால் அது குளோபல் இக்வான் நிறுவனம் தான்.
அப்படித்தான் நடக்கும். நடக்க வேண்டும். சிறார் இல்லம் என்று சொல்லி அங்கிருந்த சிறுவர்-சிறுமியர்க்கு சொல்லமுடியாத அளவுக்குத் துன்பங்களைக் கொடுத்திருக்கின்றனர். இதில் பாலியல் துன்பங்களும் அடங்கும்.
அந்த இல்லங்களில் இருந்தவர்களை அனாதைக் குழந்தைகள் என்று சொல்லி வளர்த்திருக்கின்றனர். அதில் மனவேதனையான சம்பவம் ஒன்று உண்டு. அங்கு வேலை செய்து வரும் ஒருவனுக்கு நான்கு மனைவிகளாம். நான்கு மனைவிகளுக்கும் சுமார் 34 குழந்தைகளாம். அதில் இரண்டு முழந்தைகளை மட்டும் அவன் வளர்க்கின்றானாம். மற்ற 32 குழந்தைகளும் அனாதைகளாக அவர்களின் சிறார் இல்லத்திலேயே வளர்க்கப்படுகின்றனராம். அனாதைகளாக, அப்பன் பேர் தெரியாதவர்களாக வளர்கின்றனராம். அந்த சிறார் இல்லங்களில் அப்படித்தான் பிள்ளைகள் அனாதைகளாக வளர்கின்றனராம்.
.
கொஞ்சம்கூட மனிதாபிமானமற்ற ஒரு நிறுவனம் என்றால் அது இக்வான் நிறுவனம் தான். அவர்கள் சிறார் இல்லங்கள் மட்டும் அல்ல நாடு தழுவிய அளவில் உணவகங்கள், மளிகைப் பொருள்கள்விற்கும் பேராங்காடிகள் இன்னும் பல தொழில்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இப்போது அரசாங்கம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஆரம்பித்திருக்கிறது. வங்கிக்கணக்குகளை முடக்கிவிட்டது. வாகனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. சிறார் இல்லங்களும் இழுத்து மூடப்பட்டுவிட்டன. இப்போது மக்களும் அவர்களின் மளிகைக் கடைகள், பேரங்காடிகள் அனைத்தையும் புறக்கணிக்கவும் ஆரம்பித்துவிட்டனர்.
இப்படிப்பட்ட கேடுகெட்ட நிறுவனங்கள் எல்லாம் எப்படி செயல்படுகின்றன என்பது நமக்கே புரியவில்லை. குழந்தைகளை வைத்து வியாபாராம் செய்யும் இவர்கள் அதிகாரிகளின் கண்களிலிருந்து எப்படி தப்பியிருக்க முடியும் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். எல்லாருமே கூட்டுக்களவாணிகளா என்பது விசாரணையில் தான் தெரிய வரும்.
மக்களின் நம்பிக்கையை முற்றிலுமாக இழந்துவிட்ட இந்த அயோக்கியர்களின் கூட்டத்தை யார் இனி நம்புவார்!
No comments:
Post a Comment