நிச்சயமாக இது கடவுள் செயல் அல்ல. சாத்தான்கள் மனிதப்பிறப்பு எடுத்து இந்த உலகையே ஆட்டிவைப்பதாகத் தான் தெரிகிறது.
குழந்தை பராமரிப்பு இல்லங்கள் நாடெங்கிலும் உள்ளன. அரசாங்கம், தனியார் என்று பல இல்லங்கள். இன்னும் தனிப்பட்ட முறையில் பெண்கள் பலர் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். காரணம் தேவைகள் அதிகம். அதிகமானப் பெற்றோர்கள் வேலை செய்கின்றனர். அதனால் இந்தப் பராமரிப்பு இல்லங்கள் தேவைப்படுகின்றன.
ஆனால் இங்கு வேலை செய்பவர்களுக்கு, அதிகாரபூர்வ இல்லங்களுக்கு, ஒரு வேளை அங்கே வேலை செய்பவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கக் கூடும். வியாதிகள் உள்ளனவா போன்று சில கட்டுப்பாடுகள். ஆனால் அவர்களின் குண நலன்களைப்பற்றி யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. கொடூர மனநலன்கள் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அப்படித்தான் மேலே கைது செய்யப்பட்டிருக்கும் பெண் ஒருவர். பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. எந்த முன்னேற்றமும் இல்லை. அப்படியென்றால் தண்டனைகள் போதவில்லையோ? நமக்கும் புரியவில்லை. குழந்தைகள் எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தப் படுகிறார்கள் என அறியும் போது மனம் வலிக்கத்தான் செய்கிறது.
அந்தப் பெண்ணுக்கு 24 வயது என்று சொல்லப்படுகிறது. இரண்டு மாத குழந்தைக்குத் தாய். அந்தக் குழந்தைக்கு இன்னும் பாலூட்டிக் கொண்டிருக்கிறார். அவருக்குப் புற்றுநோய் பாதிப்பும் இருக்கிறது. அவரின் குழந்தைக்கு இதய நோய் இருப்பதாகவும் அறியப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருப்பவர் பராமரிப்பு இல்லங்களில் வேலை செய்தால் என்ன நடக்கும்? இவர் என்ன செய்தார்?
பராமரிப்பு இல்லத்தில் இருந்த ஒரு 17 மாதக் குழந்தை. குழந்தைக்குப் பசியில்லை. அக்குழந்தைக்கு வலுக்கட்டாயமாக உணவு அளித்தார். எப்படி? தலைமுடியை இழுத்துக் கொண்டார். மூக்கை அழுத்திக் கொண்டார். அப்படித்தான் உணவளித்திருக்கிறார். இது தான் அவர் மீதான குற்றச்சாட்டு. அத்தோடு வேறு என்ன செய்திருப்பார் என்று நீங்களே கற்பனைச் செய்து கொள்ளுங்கள்.
பராமரிப்பு இல்லங்களில் பணிபுரிபவர்களுக்கு அதீத பொறுமை வேண்டும். எல்லாவற்றையும் விட அன்பு வேண்டும். இன்றைய நிலையில் மனிதரிடையே அன்பு மட்டும் தான் குறைவாக இருக்கிறது. மற்றவைகள் நிறைவாக இருந்து என்ன பயன்?
No comments:
Post a Comment