சரஸ்வதி பூஜை - புக்கிட் ஜாலில் தோட்டத் தமிழ்ப்பள்ளி
சரஸ்வதி பூஜை என்பது நமது தமிழப்பள்ளிகளில் காலங்காலமாக நடைப்பெற்று வரும் ஒரு கலாச்சார நிகழ்வு என்பது தான் நமது புரிதல்.
அது நல்லதா கெட்டதா என்றெல்லாம் விவாதம் செய்ய வேண்டிய அவசியமில்லை. நமது பிள்ளைகள் நல்ல கல்வி அறிவு பெற வேண்டும் என்று தான் அந்தப் பூஜையின் முக்கிய நோக்கம். அதனை நல்லதாகவே நாம் எடுத்துக் கொள்வோம்.
வேண்டாம் என்று சொல்லுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. அதனைத் தடை செய்ய வேண்டும் என்று சொல்லுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு நல்ல காரியத்திற்காக அந்த பூஜை நடந்து வருகிறது. பிள்ளைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும் என்று தான் எல்லாப் பெற்றோர்கள் விரும்புவார்கள். அதுவும் ஆண்டுக்கு ஒரு முறை தான் அந்த விழா கொண்டாடப்படுகிறது. அதையும் தடை செய்ய வேண்டுமென்று சொல்லுவது, மனசாட்சியே உங்களுக்கு இல்லையா?
இந்த விழா தமிழர் கலாச்சாரம் அல்ல என்றால் ஒரு வேளை தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற கலாச்சாரங்களிலிருந்து வந்திருக்கலாம். தீபாவளி கூட தமிழர் கலாச்சாரம் அல்ல என்கிறார்கள், அதற்கு என்ன செய்வது? நமது கலாச்சாரமாக அது புகுத்தப்பட்டு விட்டது. நாமும் ஏற்றுக் கொண்டோம். வேண்டாம் என்றால் நாம் கொண்டாட வேண்டாம். தெலுங்கு மக்கள் உகாதியைத் தான் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். மலையாளிகள் ஓணம் பண்டிகையைத் தான் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். தமிழர்கள் பொங்களைத் தான் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். ஆனால் தீபாவளி அனைவருக்கும் பொதுவானதாக ஆகிவிட்டது. கொண்டாடத்தானே வேண்டும்?
அதே போலத்தான் இந்த சரஸ்வதி பூஜை என்பதும். அனைவரும் ஏற்றுக்கொண்ட பிறகு இது நமது கலாச்சாரம் அல்ல என்றால் என்ன அர்த்தம்? வேறு யாரும் எதிர்க்கவில்லையே? தமிழர்கள் மட்டும் எதிர்க்க வேண்டும் என்று ஏன் தமிழர்களை வம்புக்கு இழுக்கிறீர்கள்?
அது யாருடைய கலாச்சாரமாகவே இருந்துவிட்டுப் போகட்டும். இப்போது நமது கலாச்சாரமாக ஆக்கப்பட்டு விட்டது. அதனால் எந்தப் பாதகமும் இல்லை என்றால் அதனை எதிர்க்க வேண்டும் என்கிற அவசியமில்லை.
சரஸ்வதி பூஜை பள்ளிகளில் கொண்டாடுவது நல்லது தான் என்று நினைத்துச் செயல்பட்டால் போதும். யாருக்கும் எந்த நட்டமும் இல்லை.
No comments:
Post a Comment